search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலக உதவியாளர்கள்"

    • 34 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அலுவலக அதிகாரிகள்-ஊழியர்கள் இடமாற்றம் எப்போது? என குமுறல் எழுந்துள்ளது.
    • அலுவலக உதவியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக உதவியாளர்கள் 18 பேர் திடீரென பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டையில் இருந்து திருச்செந்தூர், களக்காடு, கங்கை கொண்டான், கொல்லங்கோடு உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு அலுவலக உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பணி இடமாற்றம் குறித்து அலுவலக உதவியாளர் ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக நகராட்சி அலுவலகத்தில் பணி யாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யாமல் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் எங்களை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதனால் பொருளாதார ரீதியாகவும் குடும்ப சூழ்நிலை ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதனை நகராட்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்கள் மற்றும் அதிகா ரிகள் 34 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் எங்களை மட்டும் குறிப்பாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்று வேதனை யுடன் தெரிவித்தார்.

    பொதுவாக அரசு பணியில் உள்ள ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வேலை பார்த்தால் அந்த நபரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்வார்கள். ஆனால் இந்த நகராட்சியில் ஏன் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அலுவலக ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யாமல் உள்ளனர்? புதிதாக பணியில் சேர்ந்தவர்களை இடமாற்றம் செய்வது என்ன நியாயம்? என்று பாதிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள் கேள்வி விடுக்கின்றனர். எனவே இந்த இடமாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட் அதிகாரிகள் மீண்டும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அலுவலக உதவியா ளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    ×