search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறவாணன்"

    சென்னையில் தமிழறிஞர் க.ப. அறவாணன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Aravanan

    சென்னை:

    தமிழறிஞரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான க.ப. அறவாணன் சென்னையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

    அறவாணன் சென்னை அமைந்தகரை முனி ரத்தினம் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார். இன்று அதிகாலையில் திடீரென்று அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உயிர் பிரிந்தது.

    அறவாணன் மரண செய்தி அறிந்ததும் ஏராளமான தமிழறிஞர்கள் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    க.ப.அறவாணன் நெல்லை மாவட்டம் கடலங்குடியில் 9.8.1941-ல் பிறந்தார். தமிழில் புலமைபெற்ற அவர் தமிழில் உயர்கல்வி பெற்று புதுவை மத்திய பல்கலை கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார். பின்னர் லயோலா கல்லூரியிலும் பணியாற்றினார்.

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர். பல பல்கலைக் கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினராகவும் இருந்தவர்.

    50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். 3 முறை தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதையும் பெற்று இருக்கிறார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் இலக்கிய பரிசு பெற்றவர்.

    க.ப.அறவாணன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழறிஞரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான க.ப.அறவாணன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். தமிழின் தொன்மை குறித்த ஆய்வு நோக்கும் தமிழ் வளர்ச்சி குறித்த தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தமிழறிஞரான க.ப.அறவாணன் நவீனத் தமிழுக்கு செய்துள்ள தொண்டு அளப்பரியது.

    கல்வித்துறையில் தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் பல பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுக்களில் பங்கேற்று சிறப்பான பாடத்திட்டங்களை உருவாக்கத் துணை நின்றவர். மொழியியல், மானுடவியல், சமூகவியல் உள்ளிட்ட துறைகளில் 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்.

    அறிவியல் கண்ணோட்டத்துடன் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்குத் துணை நின்றவர். தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்ற க.ப.அறவாணன் தனது பெயரில் அறவாணன் விருது என்பதை உருவாக்கி அதனை தமிழ்ச் சான்றோருக்கு வழங்கி தமிழ் மொழியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தியவர்.

    திராவிட இயக்கத்தின் மீது பற்றும், முத்தமிழறிஞர் கலைஞரிடம் தனிப்பட்ட அன்பும் நட்பும் கொண்டிருந்தவர் க.ப.அறவாணன்.

    நமது இனத்தின் வரலாற்றை அவசியம் படிப்பதுடன், இனத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் நாமும் வரலாறு படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதன்படி வாழ்ந்த அறவாணன் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்குப் பேரிழப்பாகும்.

    தமிழறிஞர் க.ப.அறவாணனை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தமிழ்ச் சான்றோர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    க.ப.அறவாணன் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருத்தமும், துயரமும் அடைகிறேன். பழகுவதற்கு இனியவர், சிறந்த பண்பாளர். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் க.ப.அறவாணன் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன். தமிழ றிஞரின் மரணம் தமிழகத் திற்கும் உலக தமிழருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக் கிறேன். அவரது குடும்பத் தாருக்கு தமிழக பா.ஜனதா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    க.ப.அறவாணன் மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Aravanan

    ×