search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு சிறப்பு செயலர்"

    • ராமநாதபுரம் மாவட்டம் முன்னோடியாக திகழ வேண்டும் என அரசு சிறப்பு செயலர் அறிவுறுத்தினார்.
    • அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகளை தூய்மையாக வைத்துகொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு சிறப்பு செயலர் ஹர் சகாய் மீனா தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    குடி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தண்ணீரின் தரம் குறித்து நாள்தோறும் பரிசோதனை செய்து விநியோகம் செய்ய வேண்டும். கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்த மற்றும் தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் முறையை பற்றிய கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவையான விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கி அனைத்து அரசு திட்டங்களையும் பெறும் வகையில் அலுவலர்கள் ஈடுபாட்டுடன் பணி செய்ய வேண்டும்.

    அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளை கவரும் வகையில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சோப்பு பயன்படுத்தி கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகளை தூய்மையாக வைத்துகொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

    மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மை செய்ய வேண்டும். அடல் டிங்கர் ஆய்வகத்தில் மாண வர்களை அழைத்துச்சென்று உரிய முறையில் செய்முறை விளக்கம் காண்பிக்க வேண்டும்.இடைநிற்றலை தடுப்பதற்கு பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களிடம் கல்வியோடு விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிவுறுத்த வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் அரசு புறம்போக்கு நிலங்க ளில் மரம் வளர்க்க வேண்டும். தொலைநோக்கு சிந்தனையுடன் முன்னேற விளையும் திட்டங்களை தயார் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் திட்டங்களை செயல் படுத்துவதில் முன்னுதாரணமாகவும், முன்னோடியாகவும் திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×