search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பு"

    திருவண்ணாமலையைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் கனவில் வந்து ஆண்டவன் உத்தரவிட்டதின் பேரில் சிவன்மலை முருகன் கோவிலில் உள்ள பேழையில் அம்பு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன் மலையில் சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பம்சம் கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்று பக்தர்களின் கனவில் வரும் பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்வதாகும். அந்தப் பொருள் கோவில் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

    சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இந்த பொருளை வைத்துப் பூஜை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

    இப்படி, கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லை. வேறொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில் பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும்.

    இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. இந்தப் பொருள் தேசிய அளவில் ஏற்றம் அல்லது இறக்கம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

    கடைசியாக கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அருகம்புல், கீழா நெல்லி வேர், மிளகு ஆகியவை பூஜை செய்யப்பட்டு வியாழக்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டி.கென்னடி என்ற பக்தரின் கனவில் சிவன்மலை முருகன் வந்து அம்பு வைத்து பூஜிக்குமாறு கூறியதால் கடந்த 6-ந்தேதி செம்பினால் செய்யப்பட்ட அம்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த அருகம்புல், கீழாநெல்லி வேர், மிளகு ஆகியவை நீக்கப்பட்டு, தற்போது அம்பு பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த முறை திருவண்ணாமலையை சேர்ந்த பெட்ரோல் பங்கு உரிமையாளர் கென்னடி என்பவர் கனவில் இந்த பொருள் வந்தது. கென்னடி என்பது கிறிஸ்வரா என்று கேட்டபோது அமெரிக்க தலைவர் ஜான் கென்னடியின் நினைவாக வைக்கப்பட்ட பெயர். மற்றபடி நான் தீவிர முருக பக்தர் என்றார்.

    பக்தர்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உள்ள அம்பை பார்வையிட்டு வணங்கினர். #Tamilnews
    ×