search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா துப்பாக்கிச் சூடு"

    துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
    ஓக்லஹோமா:

    அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

    டெக்சாஸில் உள்ள  ஒரு தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில்  ஓக்லஹோமா நகரில் உள்ள துல்சா மருத்துவமனை வளாகத்தில் நேற்று புகுந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

    தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்த ஆயுதப்படை போலீசார் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்தனர்.

    துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை துணைத் தலைவர் ஜொனாதன் ப்ரூக்ஸ் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். 

    இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி இறந்தார் என்பது குறித்த உடனடியாக கண்டறிய முடியவில்லை என ப்ரூக்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

    இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அந்த மருத்துவமனை வளாகமே ஒரு போர் களம் போல் காட்சி அளித்ததாகவும்
    காவல்துறை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அப்பள்ளியின் மாணவன் பலியாகியுள்ளான். மேலும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். #USSchoolShoot
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள ஸ்டெம்  பள்ளியில் இன்று நடத்தப்பட்ட  துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இத்தாக்குதலில் ஒரு மாணவன் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதில் 18 வயதுடைய மாணவன் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த மாணவர்கள் ஹைலேண்ட் ரஞ்ச்சில் உள்ள நார்த்ரிட்ஜ் ரைசிங் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    துப்பாக்கிச்சூடு குறித்த தகவலறிந்த நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பள்ளிக்கு முன் கூடினர். சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் மற்றும் இளைஞரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    எனினும், கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், சம்பவ இடத்திலிருந்து கைத்துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #USSchoolShoot
    ×