search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா சீனா"

    சீனா மீது அமெரிக்கா விதிக்கவுள்ள வரிவிதிப்பு கொள்கையை வரும் ஜனவரி மாதம் முதல் ரத்து செய்ய இருநாட்டு தலைவர்களும் சம்மதித்துள்ளனர். #Chinatariffs #UStariffs
    பியுனஸ் அய்ரெஸ்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரியையும், பிறநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் பலமடங்காக உயர்த்தி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவால் சீனா- அமெரிக்கா இடையில் வரிவிதிப்பு வர்த்தகப் போர் மூண்டது. சீனாவும் அமெரிக்கா மீது ஏராளமான வரிகளை அறிவித்தது. இதற்கு பதிலடியாக சீனா மீது பல்வேறு பொருட்கள் மீது சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான வரிகளை டிரம்ப் சமீபத்தில் சுமத்தினார்.

    இந்த வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது சீன அதிபர் க்சி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும், இருநாட்டு தலைவர்களும் வரிகளை தளர்த்த சம்மதம் தெரிவித்ததாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா, சீனா இடையிலான புதிய வரிவிதிப்பு வர்த்தகப் போர் இந்த மாதத்துடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. #Chinatariffs #UStariffs 
    சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க சீனா தயாராகி வருகிறது. #USTarriffs #ChinaGoods #ChinaUSTrade
    பீஜிங்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் தொடர்வதால் வர்த்தக உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. ஜனவரியில் இருந்து வரிவிதிப்பு 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.



    இந்த வரிவிதிப்புக்கு பதிலடி கொடுப்பதற்கு சீனாவும் தயாராகி வருகிறது. இது தொடர்பாக துணை பிரதமர் லியு ஹி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியானது அமெரிக்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், சீனாவிடம் போதிய நிதி மற்றும் நிதிக்கொள்கை திட்டங்கள் இருப்பதால் சீனாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் சீனா செக்யூரிட்டீஸ் ரெகுலேட்டரி கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த வர்த்தக மோதலை தீர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.

    வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதிக்குமேயானால், மூன்றாவது கட்டமாக சீன பொருட்களுக்கு வரியை கூட்டுவோம் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #USTarriffs #ChinaGoods #ChinaUSTrade
    ×