search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்துக் கட்சிக் கூட்டம்"

    கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநில ஆளுனர் மோரா அழைப்பு விடுத்துள்ளார். #JammuKashmir #Vora #AllPartyMeet
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், பி.டி.பி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக சமீபத்தில் விலக்கி கொண்டது. இதனால், பி.டி.பி. கட்சி தலைவர் மெகபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கவர்னர் வோராவிற்கு ஆலோசனை வழங்க மாஜி ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநில ஆளுனர் வோரா அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காஷ்மீரில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.  
    மேலும், தேசிய நலனுக்காகவே இந்த கூட்டம் நடக்கவுள்ளதாக தெரிவிக்கிறது. #JammuKashmir #Vora #AllPartyMeet
    ×