search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகரிக்கும் தற்கொலைகள்"

    • வாய்க்கா லில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 4 பேரையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது.

    இதையடுத்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறந்து விட ப்பட்டது. வரத்து குறைந்த தால் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. இந்த தண்ணீர் மூலம் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த தண்ணீர் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் வாய்க்கால் கரைகளை தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இந்த நிலையில் வாய்க்கா லில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 பேர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இது குறித்த விபரம் வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்த மளிகை கடை உரி மையாளர் குடும்ப தகராறு காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் தனது 2 மகன்களுடன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதே போல் நேற்று ஒரு பெண் 2 மகள்களை வாய்க்காலில் தள்ளி விட்டு தற்கொலை செய்து கொண்டார். கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கரட்டு பாளையத்தை சேர்ந்தவர் தீபக் (45). இவரது மனைவி விஜய லட்சுமி (40). இவர்களுடை மகள்கள் மதுநிஷா (12), தருணிகா (6).

    கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதே போல் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் விஜய லட்சுமி தனது 2 மகள்களை மொபட்டில் அழைத்து கொண்டு குருமந்தூர் அருகே சுட்டிக்கல் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஸ்கூட்ட ரை நிறுத்தி விட்டு தனது 2 மகளுடன் வாய்க்காலில் குதித்தார்.

    இதில் வேட்டைகாரன் கோவில் பகுதியில் உள்ள வாய்க்காலில் விஜயலட்சுமி பிணமாக மீட்கபப்ட்டார். அவரது மூத்த மகள் மது நிஷா ஆயிபாளையம் பகுதியில் ஒரு மரக்கிளையில் தொங்கி யபடி அழுது கொண்டு இருந்தார். அவரை உயிரு டன் மீட்டனர். ஆனால் அவரின் மற்றொரு மகள் தருணிகா வை கண்டு பிடிக்க முடி யவில்லை. அவரை தொடர்ந்து தேடி வருகிறார் கள்.

    இந்த நிலையில் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சுண்டக்க ம்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் தனது மகள் மற்றும் 2 மகன்களுடன் நம்பியூர் அருகே கூடக்கரை வாய்க்கால் பகுதிக்கு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 4 பேர் குடும்ப தகராறு காரணமாக வாய்க்கால் கரையோரம் தற்கொலை செய்வதற்காக நின்று கொண்டு இருந்தனர்.

    இதை கண்ட அந்த பகுதி யை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடு த்தனர். இதையடுத்து அவர்கள் கடத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 4 பேரையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுமக்கள் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். இது போன்ற விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என போலீசாரும் அதிகாரிகளும் கேட்டு கொண்டு உள்ளனர்.

    வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் அந்த பகுதிகளில் தடுப்பு அமைத்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    ×