search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடை ரெசிப்பி"

    • சோளத்தில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

    பொதுவாக அடை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வீட்டில் பலவகையான அடை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதாவது அரிசி அடை, கார அடை, கம்பு அடை போன்ற பலவகையான அடை செய்து இருப்பீர்கள்.

    ஆனால் சிவப்பு சோள அடை செய்து இருக்கிறீர்களா. ஆமாங்க சோளத்திலும் அடை செய்யலாம். சோளத்தில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. இவற்றை நாம் உணவாக உண்ணும் போது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. சிவப்பு சோளத்தை வைத்து எப்படி அடை செய்வது என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    சிவப்பு சோளம்- அரை கப்

    துவரம் பருப்பு- கால் கப்

    உளுந்தம்பருப்பு- 2 ஸ்பூன்

    பெருங்காயம்- கால் டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய்- 4

    பெரிய வெங்காயம் -1

    சீரகம்- அரை ஸ்பூன்

    நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப

    கறிவேப்பிலை- சிறிது

    உப்பு- தேவைக்கேற்ப

    செய்முறை:

    சிவப்பு சோளம் மற்றும் பருப்பு வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், கறி வேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். ஊற வைத்தவற்றை தண் ணீர் வடித்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம்,உப்பு சேர்த்து கொஞ்சம் கொர கொரப்பாக மிக்சியில் அரைக்கவும்.

    அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கரைத்து வைத்தி ருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும். அதன் மீது எண்ணெய் விட்டு புரட்டி, வெந்ததும் எடுக்கவும். சுவையான சிவப்பு சோள அடையை இப்போது நீங்கள் ருசிக்கலாம்.

    ×