search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித்குமார்"

    • புத்தர் சிலை முன்பு அஜித் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
    • இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் பைக்கில் சாகசம் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    அஜித்

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் "துணிவு" திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    அஜித்

    இந்நிலையில் தொடர்ந்து சமூக வலைதளத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. முதலில் புத்தர் சிலை முன்பு அஜித் தனது பைக்குடன் நிற்கும் புகைப்படம் வெளியானது. தற்போது அஜித் பைக்கில் சாகசம் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து புகைப்படம் வெளியாகுவதால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'ஏ.கே.61'.
    • தற்போது அஜித்தின் புதிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    மஞ்சுவாரியர் - அஜித்குமார்

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் அப்டேட் வெளிவரவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.


    அஜித்குமார்

    சமீபத்தில் நடிகர் அஜித், அவரது நண்பர்கள் மற்றும் நடிகை மஞ்சு வாரியருடன் இணைந்து லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், தற்போது இவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ஏகே 61 படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

    வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

    மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


    அஜித்

    இந்நிலையில், நடிகர் அஜித் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அஜித் மக்களோடு மக்களாக பயணம் செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


    அஜித்

    அதுமட்டுமல்லாமல், நடிகர் அஜித், ஏகே 61 படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்றுள்ளதாகவும் அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • சில தினங்களுக்கு முன்பு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக அஜித் சென்றிருந்தார்.
    • துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் குமார் வென்ற பதக்கங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி, போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி அஜித் வருகிறார்.

    அஜித்

    அஜித்

    திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் திருச்சி சென்றார். அதன்பின் அங்கு 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் அவர் கலந்துக் கொண்டார்.

    அஜித் வென்ற பதக்கங்களின் பட்டியல்
    அஜித் வென்ற பதக்கங்களின் பட்டியல்

    இந்நிலையில் அஜித் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அஜித்குமார், சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். பதக்கங்களை குவித்த அஜித்துக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • மதுரையை சேர்ந்த டால்பின் அசோக்-சுகந்தி தம்பதியரின் மகன் ரித்விக் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார்.
    • நடிகர் அஜித்தின் வாழ்த்துக்களை பெற்ற மாணவர் மகிழ்ச்சி அடைந்தார்.

    மதுரை:

    திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் துப்பாக்கி சூடும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

    துப்பாக்கி சுடுவதில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்தும் நேற்று நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். அதுபோல நேற்று நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் அதிக மதிப்பெண்களை பெற்ற வீரர் வீராங்கனைகளை நடிகர் அஜித் நேரில் அழைத்து வாழ்த்தினார்.

    அந்த வகையில் மதுரையை சேர்ந்த டால்பின் அசோக்-சுகந்தி தம்பதியரின் மகன் ரித்விக் (வயது 12) 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார். அவர் 400-க்கு 363 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார். அவரது சாதுரியத்தை பாராட்டி நடிகர் அஜித் மாணவர் ரித்விக்கை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

    அப்போது, "வருங்காலங்களில் துப்பாக்கி சுடுவதில் தலைசிறந்து விளங்க வாழ்த்துக்கள்" என்று கூறிய அஜித் மாணவர் ரித்விக்குக்கு சிறப்பான எதிர்காலம் உனக்கு உள்ளது என்றும் கூறினார். நடிகர் அஜித்தின் வாழ்த்துக்களை பெற்ற மாணவர் மகிழ்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மாணவர் ரித்விக் கூறுகையில், சிறுவயதில் இருந்து துப்பாக்கி சூடும் போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளேன். திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் சாதனை படைத்து நடிகர் அஜித்தின் பாராட்டை பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைய சாதிக்க வேண்டும் என்ற தைரியத்தையும் ஏற்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.
    • இதனிடையே மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் கலந்துக் கொண்டுள்ளார்.

    வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அஜித் சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி, போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.


    திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் கார் மூலம் திருச்சி சென்றுள்ளார். நேற்று காலை ரைபிள் கிளப்புக்குச் சென்ற இவர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். மேலும், 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளிலும் இவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.


    இந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற பின்னர் ரைபிள் கிளப் மாடியில் இருந்து நடிகர் அஜித் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதையடுத்து அவரை பார்க்க ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்தனர். அவரை பார்க்க திரண்ட ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பியும் நடனம் ஆடியும் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.
    • இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

    வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

    சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி, போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


    அஜித்குமார்

    இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் கார் மூலம் திருச்சி சென்றுள்ளார் . இன்று காலை ரைபிள் கிளப்புக்குச் சென்ற இவர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். மேலும், 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளிலும் இவர்  பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அஜித் ரைபிள் கிளப்புக்கு சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.
    • இந்த படம் குறித்த அப்டேட் அடுத்தமாதம் வெளியாகவுள்ளதாக தகவல்.

    வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

    மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.


    அஜித்

    படத்தின் வேலைகள் பெரும்பான்மையாக முடிந்து விட்டதை அடுத்து சமீபத்தில் அஜித் ஐரோப்பா நாடுகளில் சுற்றுப்பயணத்திற்காக சென்றிருந்தார். அப்போது முக்கிய சுற்றுலாத்தலங்களில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.


    அஜித்

    இந்நிலையில், ஏகே 61 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாகும் எனவும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாளான அன்று டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட போனி கபூர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • மூன்றாவது முறையாக எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.
    • ஹைதராபாத்தில் இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

    வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    அஜித்குமார்

    அஜித்குமார்


    படத்தின் வேலைகள் பெரும்பான்மையாக முடிந்து விட்டது. இதனால் அஜித் ஐரோப்பா நாடுகளில் சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டு விட்டார். அப்போது முக்கிய சுற்றுலாத்தலங்களில் அவர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். முன்னதாக ரேஸ் பைக்கில் பயணித்த படங்கள் வெளிவந்தன.

    அஜித்குமார்

    அஜித்குமார்

    கப்பலில் பயணம் செய்து அதையும் புகைப்படங்களாக எடுத்து அனுப்ப, அது இணையத்தில் பரவி வருகிறது. இப்போது முக்கிய சுற்றுலா நகரங்களில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

    • மூன்றாவது முறையாக எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.
    • ஹைதராபாத்தில் இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

    வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் பைக்குடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.




     அஜித் தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ளதாகவும் அங்கு பைக் ரேசர் குழுவுடன் அவர் பைக் ரைடு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ×