ஹெலிகாப்டரில் கிளம்பும் நடிகர் அஜித்.. ட்ரெண்டாகும் புகைப்படம்..

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'ஏ.கே.61'.தற்போது அஜித்தின் புதிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்குமார்
அஜித்குமார்
Published on

அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மஞ்சுவாரியர் - அஜித்குமார்

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் அப்டேட் வெளிவரவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அஜித்குமார்

சமீபத்தில் நடிகர் அஜித், அவரது நண்பர்கள் மற்றும் நடிகை மஞ்சு வாரியருடன் இணைந்து லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், தற்போது இவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ஏகே 61 படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com