search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு"

    • அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேசன் கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகள் அதற்காக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் செயல் பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்தி ற்குட்பட்ட குன்னூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேசன் கடை ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வகுப்பறை களுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவிகளிடம் கல்வி பயிலும் முறை குறித்து கலந்துரையாடினார்.

    அதனைத்தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் எண்ணிக்கை, எடை அளவிடும் கருவி, அங்குள்ள விளையாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க ப்படும் உணவு வகைகள் அதன் தரம் ஆகியன குறித்தும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகள் அதற்காக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    ×