search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபிரிட்ஜ் பராமரிப்பு"

    • ஃபிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது.
    • மாதம் இருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும்.

    1. ஃபிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

    2. ஃபிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.

    3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக்கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

    4. ஃபிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

    5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜை காயவைத்துச் செல்ல வேண்டும். மாதம் இருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும்.

    6. ஃபிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக்கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

    7. ஃபிரிட்ஜ்ஜில் இருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

    8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

    9. ஃபிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் கொடுக்க வேண்டும்.

    10. ஃபிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். ஃபிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

    11. ஃபிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

    12. உணவுப் பொருட்களை சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    13. ஃபிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.

    14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கும் உணவுப்பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

     15. ஃபிரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சை பழ தோல்களையோ வைக்கலாம்.

    16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

    17. ஃபிரிட்ஜின் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப்போகாமல் இருக்கும்.

    18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

    19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

    20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்த முடியும்.

    • உணவுப்பொருட்களை குறிப்பிட்ட காலம் கெடாமல் பாதுகாக்கிறது பிரிட்ஜ்.
    • சமைத்தவுடனே யாரும் உணவை ஃபிரிட்ஜில் வைப்பதில்லை.

    இன்றைய வீடுகளின் இன்றியமையாத பொருள், ஃபிரிட்ஜ், குளிர்பதனப்பெட்டி. உணவுப்பொருட்களை குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் பாதுகாக்கிறது ஃபிரிட்ஜ். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? உணவுப்பொருட்களை, குறிப்பாக சமைத்த உணவை பிரிட்ஜில் எவ்வளவு நாள் வைத்திருக்கலாம்? இதற்கு உணவியல் நிபுணர்கள் கூறும் பதில்...

    கெட்டுப்போகக்கூடிய உணவுகளான இறைச்சி, மீன், முட்டை, பால் பொருட்கள் போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்த சில நாட்கள் முதல் ஒரு வாரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் ரொட்டி, சிலவகை பழங்கள். காய்கறிகள் போன்ற அழுகாத பொருட்களை பல நாட்களுக்கு சேமிக்கலாம்.

    ஃபிரிட்ஜில் வைத்த சமைத்த உணவுகளில், 3 முதல் 4 நாட்களுக்குப் பிறகு பாக்டீரியா வளர ஆரம்பிக்கலாம். இது உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். பாக்டீரியா பொதுவாக உணவின் சுவை, வாசனை. தோற்றத்தை மாற்றாது. எனவே, ஒரு உணவு உண்பதற்கு பாதுகாப்பானதா இல்லையா என்று கண்ணால் பார்த்து உங்களால் சொல்ல முடியாது.

    சமைத்த உடனே யாரும் உணவை ஃபிரிட்ஜில் வைப்பதில்லை. உணவு உண்ணும் வரை முதலில் வெளியே தான் இருக்கிறது. அதன் பிறகு ஆறிய உணவைத்தான் ஃபிரிட்ஜில் வைக்கின்றனர். இது நுண்ணுயிரிகளை விரைவாகப் பெருக்கி, உணவை மாசுபடுத்தும் நிலைமையை உருவாக்குகிறது. எஞ்சிய உணவுகள் சுவை குறைவதற்கு காரணம் இதுதான்.

     உணவுப்பொருட்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க என்ன செய்வது?

    மீதமான உணவை காற்று புகாத பாத்திரத்தில் சேமிக்க வேண்டும் அல்லது மூடிவைக்க வேண்டும். எஞ்சிய உணவை ஃபிரிட்ஜில் மேல் அலமாரிகளில் சேமிக்கலாம். அங்கு அதிகபட்ச காற்று, குளிர்ச்சி கிடைக்கும். முதலில் உள்ளே வைத்த உணவுகளை விரைவாக உட்கொள்ளுங்கள். அதற்காக, பழைய எஞ்சியவற்றை முன்பக்கமாகவும். புதியவற்றை பின்புறமாகவும் வையுங்கள். இதுபோன்று பொதுவான ஆலோசனைகளை பின்பற்றும் அதேநேரம், பார்வை, வாசனை, தொடுதல் அடிப்படையில், ஃபிரிட்ஜில் வைத்த உணவு பாதுகாப்பானதா என உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், அமுதமாகவே இருந்தாலும் அதை தொடாதீர்கள்.

    • கனமான பாத்திரங்களை ஃபிரிட்ஜ் உள்ளே வைப்பதை தவிர்க்க வேண்டும்.
    • தரமான பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.

     கதவை திறந்ததுமே உள்ளே இருக்கிற பொருட்கள் எல்லாம் கீழே விழுற மாதிரி ஃபிரிட்ஜில் (குளிர் சாதன பெட்டி) அனைத்தையும் அடைத்து வைப்பது பலரது வழக்கம். ஆனால், ஃபிரிட்ஜில் எவற்றை வைக்கலாம், எதையெல்லாம் வைக்கக்கூடாது என்ற வரைமுறை உண்டு.

    சிலர் மீந்து போன உணவுகளை அந்த பாத்திரத்தோடு உள்ளே வைத்துவிடுவார்கள். இது தவறு. பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை ஃபிரிட்ஜ் உள்ளே வைப்பதை தவிர்க்க வேண்டும். தரமான பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.

    உருண்டை வடிவ அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களையோ, டப்பாவையோ வைப்பதை தவிர்க்கலாம். அவை ஃபிரிட்ஜ் உள்ளே சரியாக உட்காராமல் கம்ப்ரசரின் அதிர்வுக்கு ஏற்ப அதிர்ந்து, தேவையில்லாத சத்தத்தை ஏற்படுத்தக்கூடும். காய்கறி, பழங்கள் போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு இறுகக்கட்டி வைப்பதால் உள்ளே ஆவியடித்து அழுகிவிடக்கூடும். இதைத் தவிர்க்க அவற்றை `நெட் பேக்' எனப்படும் வலைப்பின்னல் பைகளில் போட்டு வைக்கலாம்.

     கறிவேப்பிலை, கீரை, பூ போன்றவற்றை காய்கறிக்கான பகுதியில் வைக்காமல் ஃபிரிட்ஜ் கதவில் இருக்கும் அறைகளில் வைக்கலாம்.

    சூடான பொருட்களை ஃபிரிட்ஜ் உள்ளே வைக்கக்கூடாது. அவற்றின் வெப்பநிலை ஃப்ரிட்ஜ் முழுவதும் பரவி, அங்கிருக்கும் வெப்பநிலையை அதிகரித்துவிடும். இதனால் மின் செலவு அதிகரிப்பதுடன், ஏற்கனவே குளிர்நிலையில் இருக்கும் பொருட்களின் குளிர்ச்சி குறைந்து அவை கெட்டுப் போகவும் கூடும்.

    ஃபிரிட்ஜ் கதவை அடிக்கடி திறப்பதை தவிர்க்க வேண்டும். அவசியம் எனில் கொஞ்சமாகத் திறந்து உடனே மூட வேண்டும். சிலர் வீட்டுக்கதவு போல ஃபிரிட்ஜை திறந்து வைத்துவிட்டு பொறுமையாக அதன் உள்ளே பொருட்களை வைப்பார்கள், எடுப்பார்கள்.

    ஃபிரிட்ஜை சமையலறையில் வைக்கக்கூடாது. பொதுவாகவே மற்ற அறைகளைவிட சமையல் அறையின் வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும். அங்கே வைப்பதால் ஃபிரிட்ஜ் உள்ளே குளிர்ச்சி குறையலாம்.

    சிலர் ஃபிரிட்ஜில் அவ்வளவாகப் பொருட்கள் இல்லை என்று அடிக்கடி அணைத்து வைத்துவிடுவார்கள். இது தவறு. என்னதான் 6 அல்லது 8 மணி நேரம் வரை ஃபிரிட்ஜை அனைத்து வைத்திருந்தாலும் மீண்டும் ஆன் செய்யும்போது ஃபிரிட்ஜ் முதலில் இருந்து வேலைசெய்ய ஆரம்பிக்கும். இதனால் மின்செலவு அதிகரிக்கும். வெயில் காலம், குளிர்காலம் என தட்ப வெப்பநிலைக்கு ஏற்ற மாதிரி ஃபிரிட்ஜின் குளிர்ச்சியை மாற்ற வேண்டும்.

    ஃபிரிட்ஜ் வடிவமைக்கும்போதே இன்பில்ட் ஸ்டெபிலைசர் அமைத்திருந்தாலும், அது மின்சாரத்தின் ஏற்ற, இறக்கத்தை அத்தனை பக்குவமாகச் சமாளிக்காது. அதனால் தரமான ஸ்டெபிலைசர் பொருத்துவது நல்லது.

    ஒவ்வொரு மாதமும் ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சிறிது சமையல் சோடா, எலுமிச்சைச்சாறு அல்லது வினிகர் கலந்து மென்மையான துணியால் ஃபிரிட்ஜின் உள்பாகங்களை துடைக்க வேண்டும். சோப்பை தவிர்க்க வேண்டும். அது ஃபிரிட்ஜினுள் தேவையில்லாத மணத்தை ஏற்படுத்துவதுடன் மென்மையான பகுதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். வெளிப்பாகத்தை காரத்தன்மை குறைந்த குளியல் சோப்பு அல்லது ஷாம்பு கலந்த நீரில் துடைக்கலாம். ஃபிரிட்ஜின் கேஸ்கட்டையும் நன்றாக துடைத்து பராமரிக்க வேண்டும்.

    • துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள் உள்ளன.
    • குளிர்சாதன பெட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

    உங்கள் ஃபிரிட்ஜில் வீசும் துர்நாற்றத்தை போக்குவது என்பது சாதாரணமான வேலை அல்ல. ஆனால், அந்த துர்நாற்றத்தை போக்க சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்றும், அந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஃபிரிட்ஜை எப்படி சுத்தப்படுத்தலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

    முதல் படி, உங்கள் குளிர்சாதன பெட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கெட்டுப்போன அல்லது காலாவதியான உணவுப் பொருட்களை குளிர் சாதன பெட்டியில் இருந்து அகற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டியில் துர்நாற்றம் வீசுவதற்கு இவை முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். ஆதனால், தினமும் உங்கள் ஃபிரிட்ஜில் இருக்கும் பொருட்களை நீங்கள் சரி பார்க்க வேண்டும்.

    பேக்கிங் சோடா

    உங்கள் ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடாவை வைக்க வேண்டும் அல்லது பேக்கிங் சோடா நிறைந்த ஒரு சிறிய கிண்ணத்தை குளிர்சாதன பெட்டியின் அலமாரியில் வைக்கவும். இது ஃபிரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை உறிஞ்சி அவற்றை அகற்ற உதவும். இதனை 1 அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

    காபி பொடி

    குளிர்சாதன பெட்டியில் புதிதாக அரைக்கப்பட்ட காபி பொடியை கிண்ணத்தில் வைக்கவும். காபி பொடி உங்கள் ஃபிரிட்ஜில் உள்ள கெட்ட வாசனையை உறிஞ்சி மறைக்க உதவும். ஒவ்வொரு சில நாட்களுக்கும் அவற்றை மாற்ற வேண்டும்.

    வெண்ணிலா சாறு

    வெண்ணிலா சாற்றில் ஒரு பருத்தி உருண்டை அல்லது ஒரு துணியை ஊறவைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். வெண்ணிலா ஒரு இனிமையான நறுமணத்தை கொண்டுள்ளது, இது மற்ற வாசனைகளை மறைக்க உதவும்.

    சிட்ரஸ் தோல்கள்

    எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை மற்றும் பழங்களின் தோலை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சிட்ரஸ் பழத்தோல்கள் புத்துணர்ச்சியூட்டும் வாசனையை கொண்டவை. இவை இயற்கை எண்ணெய்களை வெளியிடுகின்றன.

    வெள்ளை வினிகர்

    தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை வினிகர் ஆகியவற்றில் சம பாகங்களை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். அந்த கலவையை கொண்டு உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் உட்புறத்தைத் துடைக்கவும். வினிகர் கெட்ட நாற்றங்களை அகற்ற உதவும். இப்போது உங்கள் ஃபிரிட்ஜில் துர்நாற்றம் வீசாது.

    ×