search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman dead"

    ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் பெண் பிணம் கிடந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வடுபாளையம் புதூர் காவேரி ஆற்றின் கரையில் சுமார் 40 வயது மதிக்கதக்க சுடிதார் அணிந்த பெண் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதி பொது மக்கள் ஜேடர்பாளையம் போலீசில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஜேடர்பாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த உடலை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோனத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை அருகே வயலில் தாழ்வான மின்கம்பி உரசியதில் பெண் பலியானார். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள உப்பரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் தனது வயலில் நாற்று நடவு பணிகளுக்காக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள கண்ணாவரம் பகுதியில் இருந்து 25 பெண் தொழிலாளர்களை அழைத்து வந்து இருந்தார்.

    உப்பரபாளையம் பகுதியில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது வயல்வெளி பகுதியில் இருந்த மின்கம்பம் ஒன்று சாய்ந்ததில் மின் வயர்கள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தெரியப்படுத்தியும் மின் கம்பம் சரி செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் வயலில் நாற்று நடவு பணியில் ஈடுபட்டிருந்த முனியம்மாள் (வயது 50) மீது தாழ்வாக தொங்கிய மின் வயர் உரசியது.

    இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற பெண் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பென்னாலூர்பேட்டை போலீசார் முனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கால் முனியம்மாள் பலியாகி உள்ளார். இது தொடர்பாக ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர், போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர், லைன்மேன், உதவியாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    ×