search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "west indies tour in india"

    திருவனந்தபுரத்தில் நவம்பர் 1-ந்தேதி நடைபெறும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியின் டிக்கெட் விலை அதிகபட்சம் 6000 ஆயிரம் ரூபாயாகும். #INDvWI
    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. முதலில் இரண்டு டெஸ்ட் போட்டி நடக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டிக்கெட் விலையை கேரளா கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

    குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை 1000 ரூபாயாகவும், அதிகபட்ச டிக்கெட்டின் விலை 6 ஆயிரம் ரூபாயகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருமானம் கேரள மாநில முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு (CMDRF) அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கேரளா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீஜித் வி நாயர் தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. #WIvIND #INDvWI
    இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. அதன்பின் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

    அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் இணைந்து தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி அக்டோபர் 4-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அக்டோபர் 21-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 4-ந்தேதி தொடங்குகிறது.



    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் விவரம்:-

    டெஸ்ட் தொடர்

    முதல் டெஸ்ட்: அக்டோபர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை - ராஜ்கோட்
    இரண்டாவது டெஸ்ட் - அக்டோபர் 12-ந்தேதி முதல 16-ந்தேதி வரை - ஐதராபாத்

    ஒருநாள் கிரிக்கெட் தொடர்

    முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 21-ந்தேதி - கவுகாத்தி
    2-வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 24-ந்தேதி - இந்தூர்
    3-வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 27-ந்தேதி - புனே
    4-வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 29-ந்தேதி - மும்பை
    5-வது ஒருநாள் போட்டி - நவம்பர் 1-ந்தேதி - திருவனந்த புரம்

    டி20 கிரிக்கெட் தொடர்

    முதல் டி20 போட்டி - நவம்பர் 4-ந்தேதி - கொல்கத்தா
    2-வது டி20 போட்டி - நவம்பர் 6-ந்தேதி - லக்னோ
    3-வது டி20 போட்டி - நவம்பர் 11-ந்தேதி - சென்னை
    ×