search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Watts up"

    மின் கம்பங்களில் உள்ள பிரச்சினைகள் தெரிவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

    திருப்பூர்:

    ஆடை உற்பத்தி, கறிக்கோழி உற்பத்தி, விசைத்தறி, கட்டுமானம், எண்ணெய் ஆலை, கொப்பரை, அரிசி ஆலை என பல்வேறு தொழில்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் மின் தேவை என்பது முக்கியத்துவம் பெறுகிறது. தடையற்ற மின் சப்ளை என்பது, அவசியமாகிறது.இருப்பினும் பல இடங்களில், சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள தெருவிளக்கு மற்றும் மின் வினியோக பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் வயர்கள் மற்றும் மின் கம்பிகள் என சில பிரச்சினைகள் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றன.

    மக்கள் நடமாட்டம் நிறைந்த குடியிருப்பு பகுதிகள் உள்ள, நகர கிராமப்புறங்களில் இத்தகைய பிரச்சினைகள் மீது மின்வாரியத்தினர் கவனம் செலுத்தினாலும், ஒதுக்குப்புறமாக உள்ள விவசாய நிலங்கள், அங்குள்ள மின் கம்பங்களில் உள்ள பிரச்சினைகள் தெரிவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

    இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தை பொறுத்தவரை, திருப்பூர், அவிநாசி என இரு கோட்டங்கள் உள்ளன. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. மின் சார்ந்த புகார்களை தெரிவிக்க 94987 94987 என்ற எண் வழங்கப்பட்டு, மின்னகம் என்ற பெயரில் 24 மணி நேரம் அந்த எண் செயல்பாட்டில் இருக்கும்.அந்த எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் கூறும் புகார்கள், 'வாய்ஸ் ரெக்கார்டு' முறையில் தானாகவே பதிவாகி விடும். குறையை சரி செய்ய அப்பகுதி சார்ந்த மின் ஊழியருக்கு அறிவுறுத்தப்படும். அந்த குறை சரி செய்த பின் சம்மந்தப்பட்ட புகார்தாரரை அழைத்து, அந்த குறைபாடு சரிசெய்யப்பட்டு விட்டதா என உறுதி செய்யப்பட்ட பின்னரே அந்த புகார் முடிவுற்றதாக கருதப்படும்.

    அதேபோல் 94421-11912 என்ற வாட்ஸ் ஆப்எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் குறைபாடு தொடர்பாக போட்டோவுடன் அந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப் அனுப்பினால் அவை சரி செய்யப்படும். கடந்த இரு நாளில் மட்டும் 110க்கும் மேற்பட்ட புகார்கள் இந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்துள்ளன.இதன் மூலம், ஒதுக்குப்புறமாக உள்ள விவசாய நிலங்கள், அங்குள்ள மின்கம்பங்களில் உள்ள பிரச்னைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×