search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water tank operators"

    ஊதிய உயர்வு வழங்க கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர்கள் போராட்டம் நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் சி.ஐ.டி.யூ - ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஜேசுதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஜெயபால் துவக்கவுரை ஆற்றினார். சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர்களுககு ஒருநாள் ஊதியம் ரூ.432,16 அடிப்படையில் மாதம் ரூ.13238 வழங்க வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ. 231, பஞ்சப்படி ரூ.124.16, நாள் ஒன்றுக்கு ரூ.355.16 வீதம் மாதம் 9,234.16 வழங்க வேண்டும். டெங்கு கொசு புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ - ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

    அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலிடம் கொடுத்து விட்டு கலெக்டர் அலுவலகத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    ×