search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vote booth Army"

    பாகிஸ்தான் தேர்தலின் போது வாக்கு சாவடிகளை நிர்வகிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. #Pakistanelection #Pakistanarmy

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப் மற்றும் நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 லட்சத்து 71 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பணியில் ஈடுபட்ட வீரர்களைவிட 3 மடங்கு அதிகம். இந்த நிலையில், தேர்தல் கமி‌ஷன் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது.

    இதில், தேர்தலின் போது வாக்கு சாவடிகளை நிர்வகிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வாக்கு சாவடிகளில் கலவரம் மற்றும் பிரச்சினைகள் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் மாஜிஸ்திரேட்டு அதிகாரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறுபவர்களை தண்டிக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு சில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாதுகாப்பு பணிக்கு மட்டுமே ராணுவம் பயன்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளன. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி. பர்கத்துல்லா பாபர் கூறும்போது, சமூகம், அரசியல் போன்றவற்றில் ராணுவம் ஈடுபடுவது அபாயகரமானது என்றார்.

    தேர்தல் கமி‌ஷனின் செய்தி தொடர்பாளர் அல்டாப்கான் கூறும்போது, ராணுவம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாது. அவர்களும் நம்மவர்கள் தான் என்றார்.

    பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷன் இம்ரான்கானுக்கு ஆதரவாக செயல்படுவதாக நவாஸ் செரீப் கூறுவதையும் அவர் நிராகரித்தார். #Pakistanelection #Pakistanarmy

    ×