search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar idol"

    சதுர்த்தி விழாவுக்கு கடுமையான கெடுபிடிகள் விதித்ததாக கூறி விநாயகர் சிலையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு இந்து முன்னணியினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #VinayagarChathurthi

    திண்டுக்கல்:

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இந்த வருடம் மாவட்ட நிர்வாகம் கடுமையான நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறி இந்து முன்னணி மாநில செயலாளர்கள் செந்தில்குமார், முத்துக்குமார் மற்றும் சங்கர் கணேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் விநாயகர் சிலையுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    போலீசார் அவர்களை உள்ளே விட மறுத்ததால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை விநாயகரிடம் கொடுத்து பின்னர் மாவட்ட கலெக்டரிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக மாவட்ட நிர்வாகம் முன் எப்போதும் இல்லாத நிபந்தனைகளை விதித்துள்ளது.

    மின் வாரிய அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். சிலை வைக்கும் இடம் தனியாருக்கு சொந்தமானது என்றால் அவரது ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    புறம்போக்கு இடம் என்றால் அரசு வருவாய் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

    இது போன்ற கெடுபிடிகளால் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதிப்பது போல அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனைகளை தளர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்க வந்துள்ளோம் என்று தெரிவித்தனர். #VinayagarChathurthi

    ×