search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village Post Officers"

    தஞ்சையில் கிராம தபால் ஊழியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய கிராம தபால் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். இதை விளக்கி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். அதன்படி கிராம தபால் ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை கோட்டத்தில் தலைமை தபால் நிலையம், கிளை தபால் நிலையங்கள் என 294 தபால் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களில் 494 கிராமிய தபால் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 107 பேர் மட்டும் நேற்று பணிக்கு வந்திருந்தனர். 387 பேர் பணிக்கு வரவில்லை.

    கமலேஷ்சந்திரா தலைமையிலான குழு அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து பணி நிறைவு பலன்களும், 1-1-2016 முதல் பணி நிறைவு பெற்ற அனைத்து கிராம தபால் ஊழியர்களுக்கும் கிடைக்கும் விதமாக அமல்படுத்த வேண்டும்.

    நிலுவை தொகை கணக்கீட்டில் ஏற்கனவே இருந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று 2-ம் நாளாக தஞ்சை தபால் நிலையம் முன்பு கோட்ட தலைவர் ஜானகி ராமன் தலைமையில் கோட்ட பொருளாளர் கருப்புசாமி, கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிராம தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக பணப்பட்டுவாடா, தபால் சேவைகள் உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

    ×