search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi accident"

    விக்கிரவாண்டி அருகே விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    சென்னை புதுப்பேட்டை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52) வியாபாரி. இவர் நேற்று மாலை ஒரு மினிலாரியில் பழைய பொருட்களை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

    மினிலாரியை தர்மபுரி மாவட்டம் பச்செனம் பட்டியை சேர்ந்த கந்தன்(25) என்பவர் ஓட்டிசென்றார். அந்த மினிலாரி இன்று அதிகாலை விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் உள்ள திருச்சி-சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது சாலை யோரம் ஏற்கனவே ஒரு லாரி விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்புறம் திடீரென மினிலாரி மோதியது. விபத்தில் மினிலாரி அப்பளம்போல் நொறுங்கியியது.

    இதில் மினிலாரியில் இருந்த சம்சுதின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    டிரைவர் கந்தன் பலத்தகாயம் அடைந்தார். விபத்துகுறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    படுகாயம் அடைந்த கந்தனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்துகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது45), தொழிலாளி

    இவர் நேற்று இரவு விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த செல்வத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசபட்ட செல்வம் பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் கொண்டும் செல்லும் வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்து விட்டார்.

    விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×