என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vijay awards
நீங்கள் தேடியது "Vijay Awards"
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய நயன்தாராவுக்கு, இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #Nayanthara #VigneshShivn
பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் சிறந்த நடிகராக `விக்ரம் வேதா' படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய `அறம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றார். மேலும் மக்களின் மனம் கவர்ந்த நாயகிக்கான விருதையும் நயன்தாரா தட்டிச் சென்றார்.
இவ்வாறாக இரண்டு விருதுகளை வென்றிருக்கும் நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது,
`உன்னை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது நயன்தாரா ! மேலும் சிறக்க ! இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா, மேலும் பல இதயங்களை கொள்ளையடிக்க வாழ்த்துக்கள் ! அறம் படத்தின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்றும், மற்றொரு டுவீட்டில், என் விருதுடன், அவளது விருதுகள் என்று தலைப்பிட்டு, மனதிற்குள், நம்ம எப்போ இப்படி விருதா வாங்கி, இந்த புள்ள கிட்ட கொடுக்கப் போரோமோ என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த நடிகருக்கான விருதை வென்ற விஜய் சேதுபதிக்கும், விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Nayanthara #VigneshShivn
×

X