search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veterinary medicine"

    கால்நடை மருத்துவ படிப்பில் சேர 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கலந்தாய்வு அடுத்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கால்நடை மருத்துவ படிப்பில் சேர 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூலை) 3-வது வாரத்தில் தொடங்கும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கை குழு தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்காக விண்ணப்பங்கள், இணையதளம் மூலம் கடந்த மாதம் (மே) 21-ந்தேதி முதல் இம்மாதம் 11-ந்தேதி வரை பெறப்பட்டன.

    இதில் கால்நடை மருத்துவ பட்டப்படிப்பில் மொத்தம் உள்ள 306 இடங்களுக்கு 12 ஆயிரத்து 107 பேரும், பி.டெக் பட்டப்படிப்புக்கு மொத்தம் உள்ள 94 இடங்களுக்கு 2 ஆயிரத்து 418 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.

    ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு கடைசி தேதியான கடந்த 18-ந்தேதி மாலை 5.45 மணி வரை கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு 10 ஆயிரத்து 207 விண்ணப்பங்களும், பி.டெக். பட்டப்படிப்புக்கு 2 ஆயிரத்து 10 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

    இதனையடுத்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்களின் தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் நடைபெறும்.

    மேலும் அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஜூலை 6-ந்தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in எனும் பல்கலைக்கழக இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    ×