search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadipatti youth death"

    வாடிப்பட்டி அருகே போலீசார் துரத்தியதில் வாலிபர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    வாடிப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை, ராமராஜபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகன் ஜோதிபாசு (வயது 28). மினி சரக்கு லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நேற்று இரவு ஜோதிபாசு சரக்கு லாரியை ஓட்டிச் சென்றார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அவர்கள் ஜோதிபாசுவின் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் சட்ட விரோதமாக மணல் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. உடனே போலீசார் ஜோதி பாசுவை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்கமாமல் இருப்பதற்காக ஓடினார். போலீசாரும் அவரை துரத்தினர்.

    இருட்டில் ஓடிய ஜோதி பாசு அதே பகுதியில் இருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பாறையில் மோதி ஜோதிபாசு பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஜோதிபாசுவின் உடலை மிட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் துரத்தியதில் வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

    ×