search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ulaanbaatar Cup"

    மங்கோலியா குத்துச்சண்டை தொடரில் இந்தியா ஒரு தங்கம், தலா நான்கு வெள்ளி, வெண்கலத்துடன் 9 பதக்கங்கள் பெற்றுள்ளது. #MandeepJangra
    மங்கோலியாவில் உலான்பாட்டார் கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் ஐந்து பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள். ஆனால் மந்தீப் ஜங்க்ரா மட்டுமே தங்கப் பதக்கம் வென்றார். மற்றவர்கள் வெள்ளிப் பதக்கத்தோடு திருப்தியடைந்தார்கள்.

    ஆண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவில் மந்தீப் ஜங்க்ரா உள்ளூர் வீரரான ஓட்கோன்பாட்டார் பியாம்பா-எர்டேனை எதிர்கொண்டார். இதில் மந்தீப் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

    இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெண்களானா சோனியா லாதர் (57 கிலோ), லவ்லினா போர்கோஹொய்ன் (69 கிலோ), ஹிமான்ஷு ஷர்மா (49 கிலோ), எட்டாஷ் கான் (56 கிலோ0 ஆகியோர் வெள்ளி வென்றனர். இந்த இந்த தொடரில் ஒரு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கம் வென்றது.
    மங்கோலியாவில் நடைபெற்றுவரும் உலான்பாதர் கோப்பை குத்துச்சண்டை தொடரின் இறுதிப்போட்டிக்கு மந்தீப் ஜாங்ரா, சோனியா லாதர், லொவோலினா போர்கோஹைன் ஆகியோர் முன்னேறியுள்ளனர். #MandeepJangra #SoniaLather #LovolinaBorgohain #UlaanbaatarCup

    உலான்பாதர்:

    மங்கோலியா தலைநகர் உலான்பாதரில் குத்துச்சண்டை கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    ஆண்களுக்கான பிரிவின் 69 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் மந்தீப் ஜாங்ரா, மங்கோலியா வீரர் டிசெண்ட்-ஆயுஷை எதிர்கொண்டார். இப்போட்டியில் மந்தீப் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பெண்களுக்கான பிரிவின் 57 கிலோ எடைப்பிரிவில் சோனியா லாதரும், 69 கிலோ எடைப்பிரிவில் லொவோலினா போர்கோஹைனும் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி போட்டியில் முன்னாள் உலக மற்றும் ஆசிய சாம்பியனான சரிதா தேவி, சீன தைபே வீராங்கனையான ஷீ யூ வூ விடம் தோல்வியடைந்தார். #MandeepJangra #SoniaLather #LovolinaBorgohain #UlaanbaatarCup
    ×