search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mongolian boxing tourney"

    மங்கோலியா குத்துச்சண்டை தொடரில் இந்தியா ஒரு தங்கம், தலா நான்கு வெள்ளி, வெண்கலத்துடன் 9 பதக்கங்கள் பெற்றுள்ளது. #MandeepJangra
    மங்கோலியாவில் உலான்பாட்டார் கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் ஐந்து பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள். ஆனால் மந்தீப் ஜங்க்ரா மட்டுமே தங்கப் பதக்கம் வென்றார். மற்றவர்கள் வெள்ளிப் பதக்கத்தோடு திருப்தியடைந்தார்கள்.

    ஆண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவில் மந்தீப் ஜங்க்ரா உள்ளூர் வீரரான ஓட்கோன்பாட்டார் பியாம்பா-எர்டேனை எதிர்கொண்டார். இதில் மந்தீப் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

    இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெண்களானா சோனியா லாதர் (57 கிலோ), லவ்லினா போர்கோஹொய்ன் (69 கிலோ), ஹிமான்ஷு ஷர்மா (49 கிலோ), எட்டாஷ் கான் (56 கிலோ0 ஆகியோர் வெள்ளி வென்றனர். இந்த இந்த தொடரில் ஒரு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கம் வென்றது.
    மங்கோலியாவில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். #SoniaLather
    மங்கோலியாவில் உலான்பாட்டார் கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனியா லாதர் கலந்து கொண்டார். இவர் காலிறுதியில் உள்ளூர் வீராங்கனையான மியாக்மர் குண்டேக்மாவை எதிர்கொண்டார். இதில் சோனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.


    லவ்லினா

    69 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான லவ்லினா போர்கோஹைன் தாய்லாந்தின் சுசாதா பனிச்சை எதிர்கொண்டார். இதில் லாவ்லினா 5-0 என வெற்றி பெற்ற அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் இவரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளா்.
    ×