search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trichy sri rangam temple festival"

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி உற்சவத்துடன் நடைபெற்றது.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடை பெறும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி உற்சவத்துடன் நடைபெற்றது. உறியடி உற்சவத்திற்காக நேற்று காலை கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. சித்திரை வீதிகளில் வெண்ணெய் விளையாட்டு கண்டருளி கிருஷ்ணன் சன்னதிக்கு வந்து சேர்ந்தார்.

    பின்னர் மாலையில் நம்பெருமாள், உபநாச்சியார்கள் திருச்சி விகையில், கிருஷ்ணனுடன் புறப்பட்டு அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவ ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். இரவு 8.15 மணியளவில் பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் உறியடி உற்சவம் கண்டருளினர். உறியடி உற்சவத்திற்காக நாலுகால் மண்டபத்தின் மேல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    அதில் அலங்கரிக்கப்பட்ட 3 பானைகளில் பால், தயிர், வெண்ணெய் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

    கிருஷ்ணன் நாலுகால் மண்டபம் எதிரில் வந்தவுடன் கீழிருந்து நீண்ட குச்சியின் மூலம் அந்த பானைகள் உடைக்கப்பட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது.

    பானை உடைந்த போது கீழே சிதறிய பால், தயிர், வெண்ணெயை பக்தர்கள் பிரசாதமாக எடுத்து உண்டனர்.

    பின்னர் அங்கிருந்து கிருஷ்ணன் மற்றும் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனர்.

    ×