search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Government Hospital"

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #DenguFever
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் ஏராளமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    செங்கம் அருகே புதுப்பாளையம் காந்திதெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 34), வாணியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த விஷ்ணுபிரியா (18) ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    சாதாரண காய்ச்சல் என கருதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அவர்கள் வந்தனர். டாக்டர்கள் அவர்களை சோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தனி வார்டில் சேர்த்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு, பன்றி காய்ச்சல் வார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். #DenguFever
    ×