search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi shoot"

    • நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 21 அதிகாரிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையின்படி நடவடிக்கை

    அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையின்படி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 21 அதிகாரிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மாவட்ட ஆட்சியராக இருந்த வி.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி.-யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட எஸ்.பி.யாக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதே, மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

     

     

     

    ×