search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvonam Spirits sales"

    திருவோணம் அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் ஏராளமாக செயல்பட்ட போதிலும் கள்ளசாராய வியாபாரமும் மறைமுகமாக நடந்து வருகிறது. கிராம புறங்களில் கள்ள சாராய வியாபாரம் அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்த போதிலும் புற்றீசல் போல சாராயம் வியாபாரம் அதிகரித்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் தோட்டத்தில் பதுக்கிய 300 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    திருவோணம் அருகே உள்ள மணிக்கிரான் விடுதியில் கள்ள சாராய விற்பனை நடைபெறுவதாக திருவோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஏட்டு மலர் மன்னன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பானை, அண்டா போன்றவை கிடப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் குடங்களில் 300 லிட்டர் சாராய ஊறல் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அங்கு சாரயம் பதுக்கி விற்பனை செய்த மணிகிரான்விடுதியை சேர்ந்த அய்யாகண்ணு மகன் ராமன் (வயது 35). மாயக்கண்ணு மகன் செந்தில் (30). செவ்வாய்பட்டியை சேர்ந்த தங்கப்பா(56) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கூறும் போது,

    சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    ×