search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thasavatharam"

    • தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும்.
    • இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள்.

    தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும்.

    இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள்.

    வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள்.

    அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன.

    தசம் என்றால் பத்து என்று பொருள்.

    மோகினி, வெங்கடாஜலபதி, ஹயக்ரீவர் என இந்த தசவதாரப் பட்டியலில் இடம் பெறாத பெருமாளின் அவதாரங்களும் உள்ளன.

    • மகா விஷ்ணு எடுத்த அவதாரங்கள் இருபத்தி ஐந்து ஆகும் என்றாலும் தசாவதாரங்களே அதிகம் பேசப்படுகின்றன.
    • அந்த இருபத்தி ஐந்து அவதாரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    மகா விஷ்ணு எடுத்த அவதாரங்கள் இருபத்தி ஐந்து ஆகும் என்றாலும் தசாவதாரங்களே அதிகம் பேசப்படுகின்றன.

    அந்த இருபத்தி ஐந்து அவதாரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    1. குமார அவதாரம்,

    2. நாரதர்,

    3. வராகர்,

    4.மத்ஸ்யாவதாரம்,

    5. யக்ஞ,

    6. நரநாராயணர்,

    7. கபிலர்,

    8. தத்தாத்ரேயர்,

    9. ஹயக்ரிவர்,

    10.ஹம்ஸாவதாரம்,

    11.துருவப்பிரியா,

    12. ரிஷபர்,

    13.பிருது,

    14. நரசிம் மாவதாரம்,

    15.கூர்மவதாரம்,

    16.தன்வந்திரி,

    17. மோகினி,

    18. வாமனாவதாரம்,

    19. பரசுராமவதாரம்,

    20.ராமாவதாரம்,

    21.வியாசர்,

    22.பலராமர்,

    23.கிருஷ்ணர்,

    24. புத்தர்,

    25. கல்கி.

    இந்த அவதாரங்களில் சில நேரடியான அவதாரமாகவும், சில ஆவேச அவதாரமாகவும் சில மறைமுக அவதாரமாகவும், சில சக்தி ஆவேச அவதாரமாகவும் எடுக்கப் பட்டுள்ளன.

    ×