search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher house jewelry theft"

    காலாப்பட்டில் பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய வேரைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    புதுச்சேரி:

    காலாப்பட்டை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி பெரியநாயகி (வயது51). இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் மருத்துவம் படித்து வருகிறார். இவர்கள் வீட்டு வேலை செய்வதற்காக கீழ்புத்துப்பட்டை சேர்ந்த மணிகண்டன் மனைவி சாந்தி என்பவரை வேலைக்கு அமர்த்தினர்.

    சாந்தி அவ்வப்போது வீட்டில் உள்ள சமையல் செய்யும் பொருட்களை திருடி வந்தார். இதனால் பெரியநாயகி சாந்தியை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று கூறி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பெரியநாயகி வீட்டில் வைத்திருந்த 8 பவுன் நகையை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

    இதுபற்றி அதிர்ச்சி அடைந்த பெரியநாயகி கூடங்குளத்தில் உள்ள தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் வீட்டில் உள்ள சமையல் பொருட்களை சாந்தி திருடுவதால் பெரியநாயகிக்கு சாந்தி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் சாந்தியிடம் விசாரித்தார். அப்போது அவர் நான் திருடவில்லை, தன் மீது வீண் பழியை சுமத்தாதீர்கள் என கூறி சென்றார்.

    மேலும் சில நாட்களில் சாந்தி, பெரியநாயகியிடம் எனக்கும், திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதோடு விட்டு விடுங்கள் என கூறி மிரட்டி விட்டு வேலையில் இருந்து நின்று விட்டார்.

    இதுகுறித்து பெரியநாயகி காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அதில் சாந்தியிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறினார். பின்னர் தான் திருடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் சாந்தியை கைது செய்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
    ×