search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழக்கன்றுகள்"

    திருத்துறைப்பூண்டி அருகே விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டது.
    திருத்துறைப்பூண்டி:

    வேளாண்மை உழவர் நலத்துறையில்  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் “ 2021-22-ன் கீழ்  தமிழக முதல்வர்  விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா சென்னையில்   நடைபெற்றது . 

    இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள திருமங்கலக்குடி , விட்டலுர்,
    மேலையூர் , மஞ்சமல்லி, ஏனநல்லுார், கூகூர் , மற்றும் இஞ்சிக்கொல்லை கிராம பஞ்சாயத்துகளில் உள்ள கிராம விவசாயிகளுக்கு காணொலிக்காட்சி வாயிலாக விழா நிகழ்வு காண்பிக்கப்பட்டது . 

    மேலும் இத்திட்டத்தின் கீழ் வேளாண்மை துறையில் முழு மானியத்தில் தென்னங்கன்றுகள், 75 சதவீத மானியத்தில் வரப்பில் பயிரிட உளுந்து ,  கைத்தெளிப்பான் மற்றும் விசைத் தெளிப்பான்கள் வழங்கப்பட்டது . 

    தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகள் பழக்கன்றுகள் மானியத்தில் வழங்கியதுடன் விவசாயிகளுடன் வேளாண் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. 

    கூகூர் கிராமத்தில் நடைபெற்ற  விழாவிற்கு   ராமலிங்கம் எம்.பி தலைமையேற்று இடுபொருட்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு,
    மாவட்ட கவுன்சிலர்கள்   சரவணன், ராஜா,  கூகூர் ஊராட்சி மன்றத் தலைவர்  அம்பிகாபதி,  கவுன்சிலர்  கலைச்செல்வி ,
    வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன்,  உதவி இயக்குநர் கவிதா, துணை அலுவலர்  சுந்தரேஸ்வரன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×