search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore news கோவை செய்திகள் கோவை நியூஸ்"

    காரில் 224 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
    கோவை:

    கோவை தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார்  தலைமையிலான போலீசார் பன்னிமடை தாழியூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 224 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை கடத்தி வந்த குரும்பபாளையத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 22), மதன்சிங் (22), இந்திரகுமார் (22) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    அன்னூர்  அருகே உள்ள குன்னத்தூரில் குடோன் வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி யராஜ் தலைமையிலான போலீசார்  தகவல் வந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்து இருந்த உலகநாதன் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.    

    இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், மாநகரில் 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
    கோவை:

    கோவை மாநகர மக்களின்  முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை. இந்த அணையில் இருந்து  எடுக்கப்படும் தண்ணீர், மாநகரில் 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் விநியோகம்  செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவ மழை நன்றாகப் பெய்ததால், அணையின் நீர் மட்டமானது 874 மீட்டர் வரை உயர்ந்தது.
     
    சிறுவாணி அணையைப் பராமரிக்கும் கேரள அரசு, பாது காப்பு காரணமாக அணையின் முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை அடைய விடாமல், அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்துவிட்டது. இதன் காரணமாக, 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, சிறுவாணி அணை முழுக்கொள்ளளவை எட்டவில்லை. அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 871 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கத்தால் படிப்படியாக சரியத் தொடங்கியது. 

    இந்நிலையில், தற்போது சிறு வாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணைக்குச் செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கடந்த வாரத்தில் 869.80 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்றய நிலவரப்படி 870.40 மீட்டராக ஆக உயர்ந்துள்ளது.  

    இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

     இந்த ஆண்டு, ஜூன் மாதத்துக்கு முன்பே கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 2 வாரமாக இடை வெளி விட்டு மழை பெய்கிறது. வழக்கமாக செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஜூலை, ஆகஸ்டில் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புகள் அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    10 நாட்களுக்கு முன்பு இவரது நெருங்கிய நண்பர் விக்னேஷ் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
    கோவை:

    தஞ்சை அருகே உள்ள வெள்ளான்காட்டை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் தருண் (வயது 21). இவர் சூலூர் அருகே உள்ள ராவூத்தூர் பிரிவில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.  கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவரது நெருங்கிய நண்பர் விக்னேஷ் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இதனால் கடந்த சில நாட்களாக தருண் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
      
    சம்பவத்தன்று அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    காதலை ஏற்க இளம்பெண் மறுத்ததால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருேக உள்ள சுகுணாபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்தவர் முருகேசன்.தச்சு தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் (வயது 17). 
     
    இவர் கடந்த வருடம் வால்பாறையில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார்.  தற்போது சக்திவேல் கல்லூரிக்கும் செல்லாமல், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். 

    சம்பவத்தன்று இவரது தந்தை வேலைக்கு சென்று இருந்தார். தாய் தனது மகளை நர்சிங் கல்லூரியில் சேர்ப்பதற்காக வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அவர்கள் கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் சக்திவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

     அப்போது சக்திவேல் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் நான் ஒரு பெண்ணை கடந்த சில வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்தேன். பலமுறை அந்த பெண்ணை சந்தித்து காதலை சொல்லியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

    எனவே எனக்கு வாழ பிடிக்கவில்லை என எழுதி இருந்தார்.பின்னர் போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×