search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore newsகோவை செய்திகள் கோவை நியூஸ் கோயம்புத்தூர் செய்திகள் கோயம்புத்தூர் நியூஸ்"

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    வடகோவை- பீளமேடு ரெயில்வே தண்டவாளம் இடையே டெக்ஸ்டூல் அருகே நேற்று இரவு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ெரயில் மோதி இறந்து கிடந்தார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மூதாட்டியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. 

    அவர் கறுநீல ஆரஞ்சு கலர் சீலை அணிந்து இருந்தார். அவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை போத்தனூர் ரெயில்வே தண்டவாளம் மதுக்கரை மார்க்கெட் ரோடு மோகன் நகர் மேம்பாலம் அருகே 40 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலை சோதனை செய்தனர். பின்னர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இந்த ஜமாபந்தியில் பொதுமக்களின் குறைகள் மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும்.
    வடவள்ளி:

    கோவை மாவட்டம் பேருர் தாலுகாவுக்கு உட்பட்ட 24 கிராமங்களில் நாளை முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளது.   உதவி வருவாய் கோட்டாட்சியர் தெற்கு இளங்கோ தலைமையில் நடைபெறவுள்ளது. 
     
    முதலாவதாக ஆலந்துறை பகுதியில் நாளை காலை 10 மணியளவில் தொடங்கும் இந்த ஜமாபந்தியில் பொதுமக்களின் குறைகள் மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும். பட்டா, சிட்டா மற்றும் சிறு, குறு விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய பட உள்ளது. 

    துறை ரீதியான மனுக்கள், மற்ற துறை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து  தீர்வு காணப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த குறைதீர்க்கும் முகாமில் நாளை இக்கரைபூலுவம்பட்டி, செம்மேடு, மத்துவராயபுரம், ஆலந்துறை, பூலுவம்பட்டி பகுதிகளிலும் நடக்கிறது.

    27-ந் தேதி தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் பகுதிகளிலும், 31-ந் தேதி நரசிபுரம், வெள்ளிமலைபட்டினம், ஜாகிர் நாய்க்கன்பாளையம், தேவராயபுரம் தொண்டாமுத்தூர், தென்னமநல்லூரிலும் ஜூன் 1-ந் தேதி  கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, கீழ்சித்திரை சாவடி, மேற்கு சித்திரை சாவடியிலும், ஜூன்  2-ந் தேதி  வீரகேரளம், வேடப்பட்டி, பேரூர், சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
    ×