search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பேரூர் தாலுகாவில் நாளை முதல் 5 நாட்கள் ஜமாபந்தி

    இந்த ஜமாபந்தியில் பொதுமக்களின் குறைகள் மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும்.
    வடவள்ளி:

    கோவை மாவட்டம் பேருர் தாலுகாவுக்கு உட்பட்ட 24 கிராமங்களில் நாளை முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளது.   உதவி வருவாய் கோட்டாட்சியர் தெற்கு இளங்கோ தலைமையில் நடைபெறவுள்ளது. 
     
    முதலாவதாக ஆலந்துறை பகுதியில் நாளை காலை 10 மணியளவில் தொடங்கும் இந்த ஜமாபந்தியில் பொதுமக்களின் குறைகள் மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும். பட்டா, சிட்டா மற்றும் சிறு, குறு விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய பட உள்ளது. 

    துறை ரீதியான மனுக்கள், மற்ற துறை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து  தீர்வு காணப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த குறைதீர்க்கும் முகாமில் நாளை இக்கரைபூலுவம்பட்டி, செம்மேடு, மத்துவராயபுரம், ஆலந்துறை, பூலுவம்பட்டி பகுதிகளிலும் நடக்கிறது.

    27-ந் தேதி தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் பகுதிகளிலும், 31-ந் தேதி நரசிபுரம், வெள்ளிமலைபட்டினம், ஜாகிர் நாய்க்கன்பாளையம், தேவராயபுரம் தொண்டாமுத்தூர், தென்னமநல்லூரிலும் ஜூன் 1-ந் தேதி  கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, கீழ்சித்திரை சாவடி, மேற்கு சித்திரை சாவடியிலும், ஜூன்  2-ந் தேதி  வீரகேரளம், வேடப்பட்டி, பேரூர், சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
    Next Story
    ×