search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore news கோவை செய்திகள் கோவை நியூஸ் கோயம்புத்தூர் செய்திகள் கோயம்புத்தூர் நியூஸ்"

    பி.ஏ.பி. திட்டத்தில் தமிழகம் எடுத்துக ்கொள்ளவேண்டிய 30.5 டி.எம்சி தண்ணீர் தமிழகம் ஒரு ஆண்டு கூட முழுமையாக எடுத்துக ்கொள்ளமுடியவில்லை.
    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பி.ஏ.பி. திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. பி.ஏ.பி. திட்டத்தில் தமிழகம் எடுத்துக் கொள்ளவேண்டிய 30.5 டி.எம்சி தண்ணீர் தமிழகம் ஒரு ஆண்டு கூட முழுமையாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. இதனால் கடைக்கோடி பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
     
    இதுபோன்ற சூழலில், ரூ.930 கோடியில் பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்த்தேக்கத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதற்கு ஆழியாறு, பாலாறு, படுகை விவசாயிகள் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் பழைய ஆயக்கட்டு பாசன சங்கம், புதிய ஆயக்கட்டு பாசன சங்கம் சார்பில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வதை கைவிடகோரி பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் வருகிற 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்காக துண்டு பிரசுரங்களையும் வினியோகித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பி.ஏ.பி.திட்டம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கிடையே ஒப்பந்தபடி கேரளாவுக்கும், தண்ணீர் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

    ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது கண்டிக்கதக்கது.  இங்கிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றால், கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டும். எனவே அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தை நிறுத்த கோரி, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து வருகிற 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதற்கு ஆதரவு கோரி பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்கி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.     

    டிப்ளமோ பட்டதாரியான கவுதம் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
    கோவை:

    நெகமம் அருகே உள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் ஆதியப்பன். இவரது மகன் கவுதம் (வயது25). டிப்ளமோ பட்டதாரியான இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்த கொண்ட கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.    

    வாலிபர் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணுடன் நெருங்கி பழகினார்.
    கோவை:

    கோவை செட்டிபாளையத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் செட்டிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். அதே நிறுவனத்தில் குனியமுத்தூர் செந்தமிழ் நகரை சேர்ந்த அப்துல் ஹமிது(26) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நான் தினமும் வீட்டில் இருந்து கம்பெனிக்கு சொந்தமான வாகனத்தில் வேலைக்கு செல்வது வழக்கம். அப்போது அப்துல் ஹமீது என்னிடம் நட்பாக பழக தொடங்கினார். இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 10 மாதங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தோம்.

     காதலிக்க தொடங்கிய பிறகு, அப்துல்ஹமீது என்னை ஊட்டி உள்பட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்றார். 

    ஊட்டியில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தோம். அப்போது அறையில் வைத்து நான் உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி என்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.  மேலும் உக்கடத்திலும் அறை எடுத்து தங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு என்னை போனில் தொடர்பு கொண்ட அவர், எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. நாம் நம் காதலை கைவிட்டு விடலாம். 

    இனி என்னை நீ தொந்தரவு செய்ய கூடாது என கூறினார். மீறி தொந்தரவு செய்தால் நாம் இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. அதனை சமூக வலைதளங்களில் ெவளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார்.

    எனவே திருமணம் ஆனதை மறைத்து, என்னை ஏமாற்றிய அப்துல்ஹமீது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    அதன்பேரில் செட்டிபாளையம் போலீசார் அப்துல்ஹமீது மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.   

    வீட்டு வேலைக்கார பெண் கவிதா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:
     
    கோவைப்புதூரை சேர்ந்தவர் சொர்ணகுமாரி(வயது78). இவர் கரூர் மாவட்ட கலெக்டரிடம் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

    இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். வீட்டில் சொர்ணகுமாரி  மட்டும் தனியாக வசித்து வந்தார். அவர் வீட்டு வேலையை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

    இதற்காக  கடந்த மார்ச் மாதம் திருச்சியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு சேர்த்தார். அந்த பெண் பணிக்கு சேர்ந்த 4 நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டார். 
     
    சம்பவத்தன்று சொர்ணகுமாரி வீட்டில் இருந்த பீரோ சாவியும் மாயமாகியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 5 பவுன் தங்க நகை திருட்டுப் போயிருந்தது. 

    இதனால் அதிர்ச்சியடைந்த சொர்ணகுமாரி இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வீட்டு வேலைக்கார பெண் கவிதா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடனடியாக சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து வினோத் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    கோவை:
     
    கோவை ராமநாதபுரம் பாரதிநகர் அருகே உள்ள கணபதி காலனியை சேர்ந்தவர் கணேசன். 
     
    இவரது மகன் வினோத் கண்ணன்(வயது35). இவர் பிளாஸ்டிக் டோர் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி விட்டது. தனது மனைவி மற்றும் தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்தார். இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் அனைவரும் தூங்க சென்றனர்.
     
    வினோத் கண்ணன் எப்போது வீட்டில் உள்ள அறையில் உறங்குவது தான் வழக்கம். ஆனால் நேற்று ஹாலில் படுத்து உறங்கினார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் வீட்டு சுவரின் கான்கிரீட் இடிந்து உறங்கி கொண்டிருந்த வினோத் கண்ணன் மீது விழுந்தது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். சத்தம் கேட்டு பெற்றோரும், அவரது மனைவியும் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    இதனை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். மேலும் உடனடியாக சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து வினோத் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    கோவை:
     
    கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் காலனியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி கோமளவள்ளி (வயது47). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மகளுடன் நடைப்பயிற்சி சென்றார். 

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கோமளவள்ளி கழுத்தில் அணிந்து இருந்த 3Ñ பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து கோமளவள்ளி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    கோவை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போவது மற்றும் திருட்டு சம்பந்தமாக ஏராளமான புகார்கள் வருகின்றன.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போவது மற்றும் திருட்டு சம்பந்தமாக ஏராளமான புகார்கள் வருகின்றன.

    இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படுகின்ற புகார்களின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன்களை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

    அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் ரூ.19.5 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. 

    அவற்றை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். 

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  

    பொது இடங்கள், கல்யாண வீடு மற்றும் பஸ்களில் பயணம் செய்யும் போது செல்போன்களை பொதுமக்கள் தவற விடுகின்றனர். அதன்படி, பெறப்பட்ட புகாரின் பேரில், சைபர் கிரைம் பிரிவு மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டு வருகிறது. 

    கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 130 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. ரூ. 19.5 லட்சம் மதிப்பிலான அந்த செல்போன்கள் இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    மேலும், கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் நடந்த கொலை, வழக்குகள், போதைப் பொருட்கள் விற்பனை, மது விற்பனை, குண்டர் தடுப்பு சட்டம், சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக 1378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 1516 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    71 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் ரூ.17,12,830 மதிப்புள்ள 172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
     
    169 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 178 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.20,55,006 மதிப்புள்ள  2678 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

    1192 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 1206 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து 4900 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    57 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.39,83,100 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் சம்மந்தமாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 30 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

    மேலும் போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா 18 மற்றும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 

    போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 103 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்தும் 18 வழக்குகள் நீதிமன்ற கோப்புக்கும் எடுக்கப்பட்டுள்ளது

    பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகள் மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 1 குற்றவாளி என மொத்தம் 6 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட காவல்துறை சார்பாக 6 சைபர் கிரைம் விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான 119 விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.
    கோவை:
     
    கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்திலிருந்து அவிநாசி ரோட்டுக்கு காமராஜர் சாலை செல்கிறது. இந்த சாலைகளில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருந்தன. 
     
    இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனையடுத்து கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். 

    இதனையடுத்து நேற்று நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் மாதேஸ்வரன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள் ஆறுமுகம், பசும்பொன் மற்றும்  மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் சாலைகளின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், தள்ளுவண்டி கடைகள், நடைபாதையில் உள்ள கடைகள் ஆகியவற்றை இடித்து அகற்றினர். 

    இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சாலை சிறிது தூரம் 4 வழி சாலையாக உள்ளது. மீதமுள்ள 10 மீட்டர் அகலத்தில் இருவழி சாலையாக உள்ளது. இரு புறங்களிலும் தள்ளுவண்டி கடைகள், நடைபாதை ஆக்கிரமிப்பு ஆகியவை அதிகமாக உள்ளது. எனவே இதனை அகற்றும் பணி நடந்து வருகிறது  என்றனர்.
    2 ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணியாற்றும் 28 தொழிலாளர்களின் பி.எப் பணம் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது
    கோவை:

    கோவை பாலசுந்தரம் ரோட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலு வலகம் (இ.பி.எப்) செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தொழிலாளர்களின் பி.எப் கணக்கு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
     
    இதில் 2 ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணியாற்றும் 28 தொழிலாளர்களின் பி.எப் பணம் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. கடந்த 7 ஆண்டுகளில் இந்த மோசடி நடத்தப்பட்ட தாக கூறப்படுகிறது.

    இது குறித்து வருங்கால வைப்புநிதி அலுவலக பறக்கும் படை அலுவலர்கள் மைதிலி தேவி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    புகாரின் பேரில் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த போத்தனூர் கார்மல் நகரை சேர்ந்த அந்தோணி ஹர்தி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

    விசாரணையில் அந்தோணி ஹர்தி கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொழிலாளர்களின் வைப்பு நிதி பணத்தை வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றி ரூ. 55 ஆயிரத்து 274 மோசடி செய்தது தெரிய வந்தது. 

    இதனையடுத்து போலீசார் அந்தோணி ஹர்தியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    திருவிழாவின்போது பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
    கிணத்துக்கடவு:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் மாரியம்மன், விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 24-ந் தேதி முதல் தினமும் காலை, மாலை நேரங்களில் மாரியம்மன், குதிரை, சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின்போது பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    நேற்று காலை 10 மணிக்கு சூலக்கல் மாரியம்மன் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில், விநாயகர், சூலக்கல் மாரியம்மன் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து மாலை திருத்தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    சூலக்கல் மாரியம்மன் குங்குமம் நிற பட்டு உடுத்தி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா லித்தார். மாலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. 
     
    இதில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, நெகமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பக்தர்கள் நேர்த்திக்கடனாக சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் மீது வாழை ப்பழங்களை வீசினார்கள். 

    தேர் திருவிழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு தேர் மதுரை வீரன் கோவில் அருகே நிலை நிறுத்தப்பட்டது. இன்று மாலை 2-வது நாளாக தேர் திருவிழா நடைபெறுகிறது. 

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன், விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
    பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 35). 
     
    சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த தனது தோழியான சரோஜினி (42) என்பவருடன் ஒரு மொபட்டில் அந்த பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

    மொபட்டை சரோஜினி ஓட்டிச் சென்றார். பானுப்பிரியா பின்னால் அமர்ந்திருந்தார். மொபட் லாலி ரோடு-தடாகம் ரோடு சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது.

    இதில் 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரம் பானுப்பிரியா மீது ஏறி இறங்கியது.

    இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பானுப்பிரியா பரிதாபமாக இறந்தார். 

    படுகாயமடைந்த சரோஜினி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    2 பேர் மீது கோவையில் பல்வேறு காவல்நிலையங்களிலும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
    கோவை:

    கோவை உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(34). இவரை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(26), முத்துபாண்டி(23) ஆகியோர் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மாதம் 22-ந் தேதி கொலை செய்தனர்.

    இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமார், முத்துப்பாண்டியை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இவர்கள் 2 பேர் மீது கோவையில் பல்வேறு காவல்நிலையங்களிலும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனர் பிரதீப்குமாருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    இதையடுத்து இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். இதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள சுரேஷ்குமார், முத்துபாண்டி ஆகியோருக்கு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல் அளிக்கப்பட்டது. 
    ×