search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suzuki Motorcycle India"

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இன்ட்ரூடர் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #SUZUKI



    சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இன்ட்ரூடர் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்ட்ரூடர் ஸ்பெஷல் எடிஷன் எஸ்.பி. மாடலின் விலை ரூ.1.00 லட்சம், Fi எஸ்.பி. எடிஷன் விலை ரூ.1.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய இன்ட்ரூடர் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. அந்த வகையில் ஸ்பெஷல் எடிஷன் டூயல்-டோன் நிறம் கொண்டுள்ளது.

    ஸ்பெஷல் எடிஷன் சுசுகி இன்ரூடர் மாடல் மேட் பிளாக் மற்றும் கேன்டி சனோமா ரெட் அக்சென்ட்களை கொண்டுள்ளது. மற்றபடி பேக்ரெஸ்ட் வழக்கமான அம்சமாகவும், சைலன்சர் கார்டு பிளாக்-அவுட் செய்யப்பட்டுள்ளது, மேலும் புதிய ரியர்-வியூ மிரர் வழங்கப்பட்டுள்ளது.



    இந்தியாவில் சுசுகி இன்ட்ரூடர் மாடல் நவம்பர் 2017-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் சுசுகியின் க்ரூசர் மாடல் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இன்ட்ரூடர் M1800R மாடலின் வடிவமைப்பை தழுவி 155சிசி க்ரூசர் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

    சுசுகி இன்ட்ரூடர் மாடலில் 154.9 சிசி, ஏர்-கூல்டு சிங்கிள்-சிலின்டர் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 14 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 14 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் கார்புரேட்டர் மற்றும் ஃபியூயல் இன்ஜெக்ஷன் வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும் இந்த  இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    இன்ட்ரூடர் க்ரூசர் மோட்டார்சைக்கிளின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் 17-இன்ச் டியூப்லெஸ் டையர்கள் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 2018 ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் 2018 ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

    2018 SP எடிஷன் இரண்டு வித நிறங்கள்: யூனிக் பிளாக் மற்றும் டூயல்-டோன் மஜெஸ்டிக் கோல்டு / கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் கிடைக்கிறது. இரண்டு மோட்டார்சைக்கிள்களில் ஃபியூயல் டேன்க் மற்றும் முன்பக்க கவுலில் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 2018 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட SP சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

    ஜிக்சர் SP மற்றும் SF SP மாடல்களிலும் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வழங்கப்பட்டுள்ளது. இதன் SF SP மாடலில் கூடுதலாக ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 2018 ஜிக்சர் SP மாடலில் வழக்கமான கார்புரேட்டர் வழங்கப்பட்டுள்ளது. 



    புதிதாக காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் ஏ.பி.எஸ். வசதி தவிர இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களிலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டு மாடல்களிலும் 155சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 14.6 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 14 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    புதிய 2018 ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP மாடல்களின் முன்புறம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன்கள் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்களும், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் 2018 ஜிக்சர் SP விலை ரூ.87,250 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்றும் ஜிக்சர் SF SP மாடலின் விலை ரூ.1.00 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×