search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Super Fast Train"

    • குமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அதிவிரைவு ரெயில் வாரந்தோறும் 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.
    • இந்த ெரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    நெல்லை:

    தென்னக ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து நெல்லை, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் அதிவிரைவு ெரயில்களாக இயக்கப்பட உள்ளது. அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து வருகிற 27-ந்தேதி முதலும், கன்னியாகுமரியில் இருந்து 28-ந்தேதி முதலும் இந்த ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

    ராமேஸ்வரம் - கன்னியாகுமரி அதிவிரைவு ெரயில் (22621) ராமேஸ்வரத்திலிருந்து திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - ராமேஸ்வரம் அதிவிரைவு ெரயில் (22622) கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

    இந்த ெரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவற்றில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×