search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sunrisers hyderabad mumbai indians"

    ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் அல்ஜாரியின் சிறப்பான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. #IPL2019 #SRHvMI
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் இறங்கினர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி மும்பை அணியினர் ரன்கள் எடுக்க திணறினர்.

    ரோகித் சர்மா 11 ரன்னிலும், டி காக் 19 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும், இஷான் கிஷன் 17 ரன்னிலும், குருணால் பாண்டியா 6 ரன்னிலும் அவுட்டாகினர். மும்பை அணி 65 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஹர்திக் பாண்டியா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ராகுல் சாஹர் 10 ரன்னில்  வெளியேறினார்.

    பொலார்ட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்துள்ளது. பொல்லார்ட் 26 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐதராபாத் அணி சார்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், மொகமது நபி, சந்தீப் சர்மா, ரஷித் கான், புனவேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் 96 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.



    மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய அல்ஜாரி 3.4 ஓவரில் 12 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். #IPL2019 #SRHvMI
    ×