search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srivaikundam"

    குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவி மற்றும் மனைவியின் தாய், பாட்டி ஆகிய 3 பேரையும் உயிரோடு தீவைத்து எரித்து விட்டு, சங்கர் தீக்குளித்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது32). லாரி டிரைவரான இவர் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் பேரூரை சேர்ந்த முருகன் மகள் கீதா (22). பட்டதாரி பெண்.

    சங்கரும், கீதாவும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமான 3 மாதத்திலேயே அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கீதா கணவரிடம் கோபித்துக் கொண்டு பேரூரில் உள்ள தனது தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து சங்கர் அவரை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தார். எனினும் கீதா திரும்பி வர மறுத்து பிடிவாதமாக தாய் வீட்டிலேயே இருந்தார். நேற்றுஇரவு சங்கர் தனது மனைவி கீதாவை அழைப்பதற்காக பேரூருக்கு சென்றார். அப்போது அங்கு கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி கீதா உடல் மீது ஊற்றி தீவைத்தார். அவரை தடுக்க வந்த கீதாவின் தாய் பெருமா, பாட்டி செல்ல பொண்ணு ஆகியோர் மீதும் சங்கர் தீ வைத்தார்.

    இதனால் கீதா, அவரது தாய், பாட்டி ஆகிய 3பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது. இதனைப்பார்த்த சங்கர் பயத்தில் தனது உடல்மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இந்த சம்பவத்தில் சங்கர், அவரது மனைவி கீதா, மாமியார், கீதாவின் பாட்டி ஆகிய 4 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு 4பேரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குடும்பம் நடத்த வரமறுத்த மனைவி மற்றும் மனைவியின் தாய், பாட்டி ஆகிய 3பேரையும் உயிரோடு தீவைத்து எரித்து விட்டு, சங்கர் தீக்குளித்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×