search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srisailam dam"

    ஸ்ரீசைலம் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 885 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 215 டி.எம்.சி. ஆகும். தற்போது, இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு 3 லட்சத்து 36 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஸ்ரீசைலம் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. அணை நிரம்பியதால் அதிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு தெலுங்கு கங்கை நதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஸ்ரீசைலம் அணையின் 12 மதகுகள் திறக்கப்பட்டு தற்போது விநாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    அணையில் இருந்து பிரமாண்டமாக ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீரின் அழகிய காட்சியை ஆந்திர மாநில மக்கள் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு ரசிக்கின்றனர். மேலும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
    ×