search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special abhishekams"

    • அனுமன் ஜெயந்தியை யொட்டி இன்று நெல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • சுத்தமல்லியில் உள்ள ஜெய்மாருதி ஞான தர்மபீடத்தில் ஆஞ்சநேயருக்கு அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 108 தேங்காய்களால், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    அனுமன் ஜெயந்தியை யொட்டி இன்று நெல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    சிறப்பு யாகம்

    நெல்லை சந்திப்பில் உள்ள கெட்வெல் ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், கும்பபூஜை மற்றும் உலக நன்மைக்காகவும், வரக்கூடிய புத்தாண்டு சிறப்பாக அமையவும் வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை பூர்ணஅபிஷேகம், திருமஞ்சனம், புஷ்பஅங்கி சாத்தி வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மாகாப்பு, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல நெல்லை சந்திப்பு வரதராஜபெருமாள் கோவிலில் திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை நடைபெற்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சுத்தமல்லியில் உள்ள ஜெய்மாருதி ஞான தர்மபீடத்தில் ஆஞ்சநேயருக்கு அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 108 தேங்காய்களால், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அங்கு இன்று மாலை ராமர் - சீதா திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    பாளை ராஜகோபால சுவாமி கோவிலில் பூர்ணாபிஷேகம், புஷ்பஅங்கி சாத்தி வழிபாடு நடைபெற்றது. நெல்லை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×