search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speak English"

    அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் சீன மொழியில் பேச எதிர்ப்பு தெரிவித்த உதவி பேராசிரியை மெகன் நீலி ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். #DukeProfessor #MeganNeely #ChineseStudent
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் மெகன் நீலி. மேலும் இவர் உயிரி புள்ளியியல் துறையின் ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் சீனாவை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு மெகன் நீலி சமீபத்தில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். அதில் “மாணவர்கள் யாரும் சீன மொழியில் பேச வேண்டாம். ஆங்கிலம் உங்களுக்கு அந்நிய மொழி என்பது எனக்கு புரிகிறது. ஆனால், அதனை மேம்படுத்திக் கொள்ள முயலுங்கள். தேவையற்ற விளைவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என்று குறிப்பிட்டார். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மெகன் நீலியின் மின்னஞ்சல் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது. மெகன் நீலியை இன வெறியர் என பலர் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனர் பதவியில் இருந்து மெகன் நீலி நீக்கப்பட்டார்.
    ×