search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solar Tent Dryer"

    • நாபார்டு வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் சங்கர் நாராயணன் சூரிய கூடார உலர்த்தியை திறந்து வைத்தார்.
    • முன்னதாக சுய உதவி குழு பெண்களுக்கு நாட்டுக்கோழிகள், மரக்கன்று, பழக்கன்றுகள் மற்றும் உரங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள சின்னூரில் விடியல் டிரஸ்டின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சூரிய கூடார உலர்த்தி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் சின்னூர் நீர் வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மிளகாய் வத்தல் மற்றும் வேளாண் விலை பொருள்களை நவீன தொழில்நுட்ப முறையில் உலர்த்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதலுக்காக சுமார் 400 சதுர அடி பரப்பளவில் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான சூரிய கூடார வளர்ச்சி நீர்வடிப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டமைக்க ப்பட்டிருந்தது. நாபார்டு வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் சங்கர் நாராயணன் சூரிய கூடார உலர்த்தியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக சுய உதவி குழு பெண்களுக்கு நாட்டுக்கோழிகள், மரக்கன்று, பழக்கன்றுகள் மற்றும் உரங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சூரிய கூடார உலர்த்தி திறந்து வைத்ததன் நினைவாக அதன் அருகில் மரக்கன்று ஒன்றை நடவு செய்தார். பின்னர் நீர்வடிப் பகுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகள் மற்றும் சீரமைப்பு பணிகளை கள ஆய்வு செய்து பணிகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது என கிராம நிர்வாக பகுதி கமிட்டி மற்றும் விடியல் டிரஸ்ட் நிறுவனத்தை பாராட்டினார்.

    நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், நாபார்டு வங்கியின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விடியல் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜோதிமணி வரவேற்று பேசினார். ஏற்பாடுகளை சின்னூர் கிராம நிர்வாக பகுதி குழு தலைவர் அருண், திட்ட மேலாளர் அசோக் குமார் மற்றும் விடியல் டிரஸ்ட் களப்பணியாளர்கள் செய்திருந்தனர். திட்ட மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    ×