search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "solar banner kerala"

    கேரளாவில் பாலியல் மற்றும் மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என நடிகை சரிதா நாயர் கூறியுள்ளார். #solarcase #SaritaNair #OommenChandy

    கோவை:

    கோவை வடவள்ளியில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மானேஜர் ரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இது குறித்தான வழக்கு விசாரணை கோவை ஜே.எம். 6-ல் நடைபெற்று வருகிறது. இன்று கோவை கோர்ட்டில் சரிதாநாயர், ரவி ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கண்ணன், விசாரணையை அடுத்த வருகிற 21-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். பின்னர் வெளியே வந்த சரிதா நாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சோலார் பேனல் மோசடியில் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, முன்னாள் அமைச்சர்கள், தற்போதுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 19 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசிடம் புகார் அளித்தேன். அதன்படி இது குறித்து விசாரணை நடத்த தனி விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டு 19 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


    இதில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி பாலியல் துன்புறுத்தல் செய்தார். அவர் மீது நான் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர் கைது செய்யப்படவில்லை. இது குறித்து கேரள அரசிடம் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உம்மன் சாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு புகார் மனு அளித்தேன். அவரை கேரள காங்கிரஸ் பொறுப்பில் இருந்து நீக்கினர். ஆனால் அவருக்கு ஆந்திராவில் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே உம்மன் சாண்டியை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #solarcase  #SaritaNair #OommenChandy

    ×