search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senthilkumar MLA"

    • புதுவை அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் முதல்முறையாக கிராமப்புறத்தில் மாநில அளவிலான கோ கோ மற்றும் கபடி போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.
    • போட்டிகளில் திட்டக்குழு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் முதல்முறையாக கிராமப்புறத்தில் மாநில அளவிலான கோ கோ மற்றும் கபடி போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி புதுவை 3-ம் வட்டத்தின் ஏற்பாட்டில், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கான தொடக்க விழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் உடற்கல்வித்துறை துணை இயக்குனர் சிவக்குமார், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் சுதா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வேரோனாஸ் விஜயலட்சுமி, கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியர் லிங்கசாமி, மாநில போட்டிகளில் திட்டக்குழு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 360 வீரர், வீராங்கனைகள் மற்றும் 60 நடுவர்கள் பங்கேற்றனர்.

    2 நாட்கள் விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு 3-ம் வட்டத்தின் செயலர் பழனி வரவேற்றார். ஓய்வு பெற்ற மூத்த உடற்கல்வி விரிவுரையாளர் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். 3-ம் வட்டத்தின் உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் தொகுத்து வழங்கினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சிவசாமி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், காட்டுக்குப்பம் கிராமத்தில், வடிகால் வாய்க்கால் அமைக்க ரூ.21 லட்சத்து 54 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், காட்டுக்குப்பம் கிராமத்தில், வடிகால் வாய்க்கால் அமைக்க ரூ.21 லட்சத்து 54 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாகூர் பேட் புதுநகர் உட்புற வீதிகளுக்கு ரூ.9 லட்சத்து 24 ஆயிரத்து 700 செலவில் வடிகால் வசதி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியின் மொத்த மதிப்பு ரூ.30லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

    இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலைபொறியாளர்கள் பிரதீப் குமார், புனிதவதி மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாகூர் தொகுதி மூ.புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வ நிறுவனம் சார்பில் புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மூ.புதுக்குப்பம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பூங்கா, பள்ளியின் பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி மூ.புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வ நிறுவனம் சார்பில் புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வேலன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார்

    எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புத்தகப்பைகளை மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    நடவடிக்கை

    மூ.புதுக்குப்பம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பூங்கா, பள்ளியின் பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுவையின் முக்கிய அடையாளமாக மணப்பட்டு, மூர்த்திக்குப்பம், புதுகுப்பம் பகுதி மாறும். நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் படகு நிறுத்த தளம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறிந்து விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும் படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ரூ.40லட்சம் செலவில் தார் சாலை விரைவில் போட ஏற்பாடு நடந்து வருகிறது.

    இவ்வாறு செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.

    விழாவில் கிளப் மகேந்திரா பொதுமேலாளர் மோகன்ராஜ், மனித வள மேலாளர் பிரபு, ஊர் பஞ்சாயத்தார் விஜயபாலு, சக்திவேல், கலை, குமார், மாரி, கலைமணி, ஆளியப்பன், வல்லத்தான், போத்திராஜ் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • பாகூர் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவர்கள்
    • ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவர்கள் செந்தில் குமார் எம்.எல்.ஏ,வை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் படிக்கும் மாணவ மாணவிகள் பயணிப்பதற்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து நிரந்தரமாக பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    மாணவ-மாணவிகளுக்கு வழங்கப் படும் சீருடைகள் காலத்தோடு வழங்கப்படவில்லை அந்த சீருடைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

    மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முட்டை வழங்கப்படுவதில்லை அதையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட செந்தில்குமார் எம்.எல்.ஏ., இது குறித்து கல்வி துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை இயக்குனரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

    ×