என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.30.70லட்சம் செலவில் நலத்திட்ட பணிகள்-செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    வாய்க்கால் அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    ரூ.30.70லட்சம் செலவில் நலத்திட்ட பணிகள்-செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், காட்டுக்குப்பம் கிராமத்தில், வடிகால் வாய்க்கால் அமைக்க ரூ.21 லட்சத்து 54 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், காட்டுக்குப்பம் கிராமத்தில், வடிகால் வாய்க்கால் அமைக்க ரூ.21 லட்சத்து 54 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாகூர் பேட் புதுநகர் உட்புற வீதிகளுக்கு ரூ.9 லட்சத்து 24 ஆயிரத்து 700 செலவில் வடிகால் வசதி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியின் மொத்த மதிப்பு ரூ.30லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

    இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலைபொறியாளர்கள் பிரதீப் குமார், புனிதவதி மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×