search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathuragiri"

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.
    • 3, 4 ஆகிய தேதிகளில் சதுரகிரி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக கடந்த 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே பருவநிலை மாற்றம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3, 4 ஆகிய தேதிகளில் சதுரகிரி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. போலீசார் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனைவரும் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு அதிகாலை முதலே பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • இன்று முதல் 6-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
    • 5-ந்தேதி பவுர்ணமி தினத்தன்று மழை பெய்தால் அனுமதி இல்லை.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இன்று மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    மேலும் 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று மழை பெய்தால் அனுமதி இல்லை. மழை பெய்யவில்லை என்றால் அன்று அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பக்தர்கள் யாரும் அனுமதி இல்லாத நாட்களில் தாணிப்பறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பக்தர்கள் யாரும் நீரோடை பகுதியில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை.
    • இரவு பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    பக்தர்கள் யாரும் நீரோடை பகுதியில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை. கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    மேலும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • மலையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது.
    • கோவிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.

    விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே வன பகுதியில் மலை மீது சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தை மாத அமாவாசையை முன்னிட்டு நாளை (19-ந் தேதி) முதல் 22-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நாளை (19-ந்தேதி) பிர தோஷ வழிபாடும், 21-ந் தேதி தை அமாவாசை வழிபாடும் நடைபெறுகிறது.

    இதையொட்டி காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்டோர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மலையேற அனுமதி கிடையாது. கோவிலுக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவிலுக்கு வருவோர்கள் மலையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது. கோவிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ, அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    தை அமாவாசை நாளில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நீரோடை பகுதிகளில் வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    தை அமாவாசையையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தகவலை சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
    • காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4-ந்தேதி (நாளை) முதல் 7-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது.

    அதேபோல், காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • இரவில் தங்கவோ, நீரோடைகளில் குளிக்கவோ அனுமதி இல்லை.
    • காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) முதல் 24-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. அமாவாசை, பிரதோஷத்தையொட்டி இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

    காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது. அதேபோல், காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

    இரவில் தங்கவோ, நீரோடைகளில் குளிக்கவோ அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாளில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகமானால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.

    • கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது.
    • சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறிச்செல்ல ஏற்கனவே வனத்துறையினர் அனுமதி அளித்து இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு நின்று பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • மழை பெய்யாவிட்டால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
    • இன்று கார்த்திகை மாத பிரதோஷம் ஆகும்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

    இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) கார்த்திகை மாத பிரதோஷம் ஆகும். கார்த்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மழை பெய்யாவிட்டால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பக்தர்கள் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து கோவிலுக்கு வர வேண்டுமெனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என வனத்துறையினர் கூறினர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடை பகுதிகளில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும், கனமழை எச்சரிக்கையாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தடை விதித்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

    இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரி வனத்துறை கேட்டின் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என வனத்துறையினர் கூறினர்.

    இதையடுத்து நீண்ட நேர காத்திருப்புக்கு பின்பு தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்ப சென்றனர். அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினார் செய்திருந்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது.
    • 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 5-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மேற்கண்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
    • 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    எனவே பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. நேற்று முதல் வருகிற 10-ந்தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையில் பீட் எண் 4 தாணிப்பாறை பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் நேற்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது.

    பிரதோஷத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருகை தந்த பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிவதால் பக்தர்கள் நலன் கருதி அனுமதி இல்லை எனஅறிவிப்பு செய்ததோடு, அனுமதி இல்லாததால் தங்கள் ஊருக்கு திரும்பி செல்லுமாறு வனத்துறையினர் கூறினர்.

    இதனால் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு. 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். புரட்டாசி மாதம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பீட் எண் 4, தாணிப்பாறை பகுதியில் உள்ள வல்லாளம்பாறை கூடாரம், இட்லி பாறை ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக தீப்பற்றி எரிந்து வந்தது. வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இந்நிலையில், நேற்று காலை குரங்கு பாறையிலும் பற்றி எரிந்த தீயையும் வனத்துறையினர் அனைத்தனர்.தீயின் காரணமாக இப்பகுதியில் இருந்த வன விலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன.

    இந்த நிலையில் காட்டுத்தீ அணைக்கப்பட்டதால் இன்று முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர். மேலும் தீ பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் எடுத்து செல்லக்கூடாது எனவும், தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×