search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sale of goats"

    • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் ஆட்டு சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • பருவமழை போதிய அளவு இல்லாததாலும் விவசாயத்தில் வருமானம் இன்றி ஆடு வளர்ப்பது அதிகப்படியான தொழிலாக செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது.

    வேப்பூரை சுற்றியுள்ள மங்களூர், பெரியநெசலூர், காட்டுமையிலூர், கழுதூர், சிறுப்பாக்கம், கொத்தனூர், தியாகதுருகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

    தற்பபோது பருவமழை போதிய அளவு இல்லாததாலும் விவசாயத்தில் வருமானம் இன்றி ஆடு வளர்ப்பது அதிகப்படியான தொழிலாக செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனை செய்ய வேப்பூர் வார ஆட்டு சந்தைக்கு எடுத்து வருவது வழக்கம். வருகிற ஞாயிற்றுக்கிழமை (10-ந் தேதி) அன்று பக்ரீத் பண்டிகையை என்பதால் இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் ஆடுகளை வாங்க சென்னை, மதுரை, திருச்சி தேனி, நாகை, கோவை , விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும், பக்ரீத் பண்டிகை நேரடியாக முஸ்லிம் சகோதரர்களும் ஆட்டுச் சந்தையில் ஆடு வாங்க பெருமளவில் வந்து குவிந்தனர்.

    மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தற்போது கொடி ஆடு, கருப்பாடு, வெள்ளாடு, ஜமுனா பூரி, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளாடு, உள்ளிட்ட 10 விதமான ஆட்டு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    ஆட்டு சந்தையின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் சுமார் 4000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு ஆட்டின் விலை சுமார் 5 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 4 மணி முதல் 7 மணி வரை 4 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    வழக்கத்தைவிட கூடு தல் விலைக்கு ஆடுகள் விற்பனை ஆவதாக ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.வளர்ந்த கிடா ஆடுகள் அதிகப்படியான விற்பனைக்கு வந்தது. இதன் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பன செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×